பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதற்கும் உற்பத்தி செய்வதற்கும் தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. மீறுபவர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்குச் மாசு விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு முற்றிலுமாக தடை விதிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. 1986-ம் ஆண்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின்படி, இதற்கான வரைவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, "பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி, விற்பனை, பயன்படுத்துவது, வைத்திருத்தல் உள்ளிட்டவை முற்றிலுமாக தடை செய்யப்பட உள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு 5 ஆண்டு வரையிலான ஜெயில் தண்டனையோ அல்லது ரூ.1 லட்சம் வரையிலான அபராதமோ அல்லது இவை இரண்டுமோ சேர்த்து விதிக்கப்படும்.
இதுசம்பந்தமாக, ஏதேனும் கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தெரிவிக்க வருகிற நவம்பர் 20-ந் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, அரசால் இறுதி அறிக்கை வெளியிடப்பட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழுமையான தடை உத்தரவு அமலுக்கு வரும்." என்று அந்த உத்தவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.