அரசும் அதன் அலட்சியப்போக்கான அதிகாரிகளும் ஒரு புறம் அனைத்து தரப்பு மக்களுக்கும் தன்னால் இயன்ற துரோகம் செய்து வருவதுடன் உள்ளூர் மக்களாக இஸ்லாமிய சமூகத்தவர்களே ஒருவருக்கொருவர் மார்க்கம் பேணாமல் துரோகமும், நில (பிறர் உடைமை)அபகரிப்பும், வரதட்சிணை கொடுமையும்,குண்டாமத்து என்னும் பம்மாத்து வேலைகளும், பெண்ணுக்கு வீடு கொடுத்து மாரடிப்பதும், சில்லரைப்பிரச்சினைகளுக்கெல்லாம் விவாகரத்து வேண்டுவதும், ஏழைகளை ஏறெடுத்து பார்க்காததும், தன்னை ஈன்றெடுத்த பெற்றோர்களை உலகில் இருப்பதை விட சாவதே மேல் என்று அற்ப உலக ஆதாயத்திற்காக கருதுவதும், ஆண்களை எல்லாம் குடும்ப பொறுப்பை தலையில் ஏற்றி ஊரை விட்டு அப்புறப்படுத்துவதும், காம இச்சைகளுக்காக எந்தக்கபோதிகளுடனோ காணாமல் போவதும், அண்ணன் தம்பிகளுக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்காமல் போர்முனையை சந்திப்பது போன்ற சங்கடமான சூழ்நிலைகள் சகஜமாக எல்லா இடங்களிலும், வீடுகளிலும் நடந்துவருமேயானால் அல்லாஹ்வுடைய வேதனைகளைத்தவிர வேறென்ன அவனிடமிருந்து நாம் எதிர்பார்க்க முடியும்? நெருப்பு மழையன்றி பன்னீர் மழையை எப்படி எதிர்பார்க்க முடியும்?
அவன் நாடினால் இறைநிராகரிப்பவர்களை (காஃபிர்கள்) வைத்தே நம் சோலியை கச்சிதமாக முடித்து சுவடு தெரியாமல் அழித்திடுவான் அல்லவா? பண்டைய இஸ்லாமிய உண்மை வரலாறுகளை புரட்டிப்பார்க்க வேண்டாமா? ஏன் தான் சிந்திக்க மறுக்கிறதோ உள்ளம்?
புரட்சிகளெல்லாம் ஊரைத்திரட்டி பிரச்சாரம் செய்து போர்க்கொடி தூக்கி ஆரம்பிக்க வேண்டிய அவசியமில்லை. அவரவர் வீடுகளிலிருந்து ஆரம்பிக்க வேண்டியுள்ளது. மார்க்கமும் அதைத்தானே சொல்லிக்கொண்டிருக்கிறது அன்று முதல் இன்று வரைக்கும். மாற்று மதத்தினரை தூற்றும் முன் நம்மவர்கள் முதலில் நல்லவர்களாக மாற வேண்டும். வெறும் இஸ்லாமிய சின்னங்கள் மட்டும் நம்மை கரை சேர்த்து விடாது. நல்ல எண்ணங்களே நம்மை சுவனம் புக செய்ய வேண்டியதை செய்யும்.
ஜாஹிர் காக்கா, புரட்சிகள் எந்த ரூபத்தில் வெடிக்குமென்று இறைவனே அறிவான். அது உங்கள் எழுத்து மூலமாக கூட இருக்கலாம். தொடருங்கள் ஒன்று சேர ஒரு சிலரல்ல ஓராயிரம் மக்கள் காத்திருக்கிறார்கள்.
அவரவர் மதங்களை அவரவர் மதித்து நடந்து மனித நேயம் காக்கப்பட வேண்டும்.
"புதியதோர் ஊர் செய்வோம்" வாருங்கள்......
மு.செ.மு. நெய்னா முஹம்மது
thanks : adirai.in