துபாய் மற்றும்பிற ஐக்கிய அரபு அமீரகங்களில் தென்னிந்தியர்கள் குறிப்பாக தமிழர்களும் மலையாளிகளும் மாற்றுக்கு அணியும் வேட்டிக்கு தடை விதித்திருப்பதாகவும், பொது இடங்களில் வேட்டியணிந்து சென்றால் அபராதம் விதிக்கபடுவதாகவும் சிலர் சொல்லக் கேட்டேன். இதுகுறித்து இணையத்தில் தேடியதில் கிடைத்த விபரத்தை அதிரை எக்ஸ்ப்ரஸ் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
கடந்த நவம்பர்-3 ஆம் தேதியிட்ட கல்ஃப் நியூஸ் ஆங்கில நாளிதழில் இதுகுறித்த செய்தி வெளியாகி உள்ளது. அதன்படி, அல்-கூஸ் என்ற துபாயின் புறநகர் பகுதியில் இருக்கும் "BOLLYWOOD CINEMA" என்ற திரையரங்கில் லுங்கியுடன் வருபவர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டு இருப்பதாகச் செய்தியில் சொல்லப்பட்டிருந்தது.
காரணம், அந்த தியேட்டருக்கு சினிமா பார்க்கவந்த சில தம்பதிகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு லுங்கியுடன் வருபவர்களால் சங்கடம் ஏற்படுவதாக தியேட்டர் உரிமையாளரிடம் புகார் கொடுத்ததையடுத்து, இத்தகைய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. இதிலிருந்து வேட்டி/லுங்கிக்கு அந்த தியேட்டரில் மட்டுமே அனுமதியில்லை என்றே அறியலாம்.
மேலும், லுங்கி அல்லது வேட்டி என்று அறியப்படும் உடையை தென்னிந்தியர்கள் மட்டுமின்றி ஏமன்,இந்தோனேசியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளைச் சார்ந்த மக்களும் அமீரகத்தின் அரபுக்களும் அணிகின்றனர். அரபுக்கள் தங்களது தேசிய உடையாகிய கந்தூராவை குதிகால்வரை மூடும்படி அணிவதால் உள்ளே அணிந்திருக்கும் வேட்டி வெளியே தெரிவதில்லை.
அந்த குறிப்பிட்ட செய்தியில் பின்னூட்டமிட்டுள்ளவர்களில் சில வேட்டியை ஆபாச உடை என்று குறிப்பிட்டிருந்தது அவர்களின் அறியாமை மட்டுமின்றி துபாயில் பணியாற்றும் 180 நாடுகளிலிருந்து வந்துள்ளவர்களில் குறிப்பாக பிலிப்பைன்ஸ் மற்றும் மேற்கத்திய நாட்டு ஆண்களும் பெண்களும் தொடை தெரியுமளவுக்கு அரைக்கால் சட்டை (Shorts/Bermuda) போன்றவற்றையும் இன்னும் சிலர் SEE THROUGH என்று சொல்லப்படும் உள்ளாடை தெரியும்படியான மெல்லிய உடைகளையும் உடுத்திக்கொண்டு பொதுவெளிகளில் வெட்கமின்றி திரிகின்றனர் என்பது இவர்களுக்கு தெரியாதோ என்னவோ?
கல்ஃப் நியூஸில் வெளியான அந்த செய்திக்கு நானிட்ட பின்னூட்டம். நீங்களும் வேட்டி ஓர் ஆபாச உடையல்ல என்று கருதினால் உங்கள் கருத்தை பதியுங்கள்.
கேடுகெட்ட மேற்கத்திய கலாச்சாரத்தில் மூழ்கிப்போனவர்களுக்கு ஆபாசம் எது? என்று சரியாகத் தெரியவில்லை. நியாயமான உங்கள் கருத்துக்கள் அத்தகையோரின் அகக்கண்களை திறந்தால் தெளிவுபெறக்கூடும். அதற்கான சுட்டி:http://gulfnews.com/news/gulf/uae/general/indecent-exposure-lungi-ban-at-cinema-1.923250
குறிப்பு: மலையாளிகளில் சிலர் அணியும் முன்பக்கம் மூடாத கைலி பலசமயம் ஆபாசமாக தெரியும். அமீரக தமிழர் அமைப்பு போன்ற சங்கங்களின் கலாச்சார விழாக்களுக்கு வெள்ளை வேஷ்டி, சட்டையுடனே கலந்து கொள்கிறார்கள்.
அமீரகவாழ் சகோதரர்களில் எவருக்கேனும் வேட்டி அணிந்து சென்றதற்காக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால் தயவு செய்து இங்கு பகிர்ந்து கொள்ளவும். உரிய ஆதாரங்களுடன் எனக்கு மடலிட்டால் துபாய்-இந்திய தூதரகம் மற்றும் ஐக்கிய அரபு குடியரசின் "சமயம் மற்றும் கலாச்சார" (AWQAF) மையத்தில் உரியவர்களை அணுகி ஆபாசமற்ற நமது உடையுடுத்தும் உரிமைக்காக முயற்சிக்கலாம்.
தொடர்புடைய சுட்டிகள்:
தொடர்புடைய சுட்டிகள்:
சுட்டிகள் : 2
thanks : adiraixpress
thanks : adiraixpress