வீடியோ கேம்ஸ், டி.வி. உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொழுது போக்கு சாதனங்களுக்கும், குழந்தைகளின் உடல் பருமன் பிரச்சினைக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வீடியோ கேம்ஸ்கள் அல்லது டி.வி. பார்க்கும் விஷயத்தில் குழந்தைகள் செலவிடும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் அவர்களின் உடல் எடை 2 மடங்காக அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாக புதிய ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. ஆகையால் மின் சாதன விளையாட்டுப் பொருட்களை, பொழுது போக்கு அம்சங்களை பயன்படுத்துவதற்கு குழந்தைகளுக்கு ஒரு எல்லைக் கோடு வகுக்க வேண்டும்.
அந்தக் எல்லைக்கோட்டை குழந்தைகள் மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது பெரியவர்களின் கடமை ஆகும். உடல் பருமன் அதிகரிப்பதால் நீரழிவு, இதய நோய்கள் உள்பட பல்வேறு ஆபத்தான நோய்கள் உண்டாகும் என்பதை பலமுறை சொல்லி வந்திருக்கிறோம். அதிலும் சின்னஞ்சிறிய வயதிலேயே உடல் எடை அதிகரித்தால் விளைவுகள் பன்மடங்கு விபரீதமாக இருக்கும் என்பதை அனைவரும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.