"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
05 ஜனவரி 2012

மின்வெட்டு

0 comments

குளிர்சாதனப் பெட்டியைச்
சூடாக்கி;
உறங்கிக்கொண்டிருந்த
உணவுப் பண்டங்களை
கல்லறைக்கு அனுப்பி;
பெருமிதத்துடன்!

உழைப்பை உறிஞ்சும்
இயந்திரத்திற்கு
ஓய்வுக்கொடுத்து;
அம்மிக் கல்லுக்கும்;
சலவைக் கல்லுக்கும்;
விரட்டியடித்துப்
பெருமூச்சு விட்டப்படி!

தொடர் கதையான
சின்னத்திரைக்கு;
சிறியத் திரையிட்டு;
கும்மி இருட்டிலும்
குடும்பத்துடன்
பேச்சுவார்த்தை
நடத்தச் செய்தச்
சாகசத்துடன்!

ஒடிந்துப்போன
விசிறி வியாபாரிகளுக்கு;
புதியச் சிறகுக் கொடுத்தச்
சந்தோசத்துடன்!

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி