ஒரு லட்சம் ரூபாய் விலை என்ற அசத்தலான விளம்பரத்துடன் கடந்த ஆண்டு அறிமுகமான டாடா நிறுவனத்தின் நானோ வகை காருக்குப் போட்டியாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சிறிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது. RE60 என்ற பெயரிலான இந்தக் கார் டெல்லியில் நேற்று 03.01.2012 அறிமுகப்படுத்தப்பட்டது.
2012 ஆம் ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜ் தெரிவித்தார். RE60 ரகக் காரில் 200 CC திறன் கொண்ட எஞ்ஜின் உள்ளது. மணிக்கு அதிகபட்சம் 70 கி.மீ. வேகத்தில் செல்ல முடிவதுடன் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 35 கி.மீ. தூரம் ஓடக்கூடியது என்றும் ராஜீவ் பஜாஜ் தெரிவித்தார்.
நடுத்தர/நகர்புற மக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் காருக்கு விலை நிர்ணயிப்பதில் அதன் கூட்டு நிறுவனங்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது.
அனேகமாக ரூ.1.25 இலட்சத்திலிருந்து ரூ.1.50 இலட்சத்திற்குள் இதன் விலை நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
thanks : .inneram