அஸ்ஸலாமு அலைக்கும்,
புதுமனை தெருவை சேர்ந்த மு.க.வா. முஹம்மது பாகர் அவர்களுடைய மகனும் நூருல் அமீன், பாகர், பஷீர் அஹ்மத் இவர்களின் தந்தையும் பேராசிரியர் மு.அ. அப்துல் காதர், அஹ்மத் அன்சாரி இவர்களின் மாமனாருமாகிய மு.க.வா முஹம்மது முஹைதீன் அவர்கள் 20-1-2012 இன்று இரவு 1 மணி அளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...
அன்னாரின் ஜனாசா, இன்ஷா அல்லாஹ் 21-1-2012 இன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.. அன்னாரின் மஹ்பிரதிற்கு துஆ செய்யவும்
குறிப்பு:
ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொள்பவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு அடக்கம் செய்யப்படும்வரை கலந்துகொள்பவருக்கு இரண்டு கீராத் நன்மையுண்டு என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இரண்டு கீராத்கள் என்றால் என்ன? என கேட்க்கப்பட்டது, அதற்கவர்கள் இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மைகள்) என்றார்கள்.
அறிவிப்பவர்:அபூ ஹுரைரா (ரலி) நூல்: புஹாரி,முஸ்லிம்,அபூதாவூத்,திர்மிதி
அறிவிப்பவர்:அபூ ஹுரைரா (ரலி) நூல்: புஹாரி,முஸ்லிம்,அபூதாவூத்,திர்மிதி
ஆக்கம் : - அதிரை எக்ஸ்பிரஸ் மீராஷா