இந்திய சுதந்திர போராட்டத்திற்காக நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு “ இந்தியன் நேஷனல் ஆர்மி ” ( INA ).
நமதூரைச் சேர்ந்த சகோதரர்கள் “பெரிய மின்னார் “ மர்ஹூம் ஜனாப் மு. முகம்மது ஷரிப் மற்றும் மர்ஹூம் ஜனாப் செய்யது முகம்மது ஆகியோர்கள் இவ்வமைப்பில் பணி புரிந்து நமது நாட்டின் சுதந்திரத்திற்காக தியாகம் செய்தவர்கள். மேலும் இவர்கள் இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள் ஆவார்கள். ஒருவர் சிங்கப்பூர் நாட்டின் குடியுரிமை பெற்றவர் மற்றொருவர் மலேசியா நாட்டின் குடியுரிமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நமதூரைச் சேர்ந்த தியாகிகள் சகோ. மர்ஹூம் S.S. இப்றாஹீம் மற்றும் சகோ. அப்துல் ஹமீத் ஆகியோர்களும் நமது நாட்டின் சுதந்திரத்திற்காக தியாகம் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் நமதூரைச் சேர்ந்த என்னற்ற தியாகிகள் மறைந்து, மறைக்கப்பட்டு உள்ளார்கள். அன்னார்கள் அனைவர்களும் வரலாற்றில் பதியப்பட வேண்டும் ( இன்ஷா அல்லாஹ் ! )
இந்தியா குடியரசுப் பெற்று 63 ஆண்டுகள் கடந்துவிட்ட இந்நாளில் நமதூரைச் சேர்ந்த இத்தியாகிகளை நினைவில் கொள்வோம்.
மறைக்கப்படுவது, மறந்துவிடுவது, மறுக்கப்படுவது வரலாற்றில் தவிர்க்கப்பட வேண்டியவை.
இறைவன் நாடினால் ! தொடரும்..........