அறிவியல் உரைக்கும்
சைனஸ்;
ஒத்துவராத சீதோஷணம்
ஒர் மைனஸ்;
கோர்த்துக் கொண்ட நீர்;
சேர்த்துக் கொண்டு வாங்கும்;
முகம் மட்டும் வீங்கும்!
சிந்திக்க நேரமில்லாமல்
தும்மலில் துவண்டுப்
போனத் தோள்களும்
ஈரமானக் கைக்குட்டையும்!
கசக்கிய மூக்கும்;
களங்கியக் கண்ணும்;
ஓய்ந்துப் போனத்
தொண்டையும்;
இரக்கமாய் ஒலிக்கும்
ஒவ்வாமை என்றழைக்கும்!
ஆக்கம் -யாசர் அரஃபாத்