"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
10 ஜனவரி 2012

மந்திரவாதி !

1 comments
ஒருவர் நமக்கு எதிரியாக கருதப்படுகிற இன்னொரு நபருக்கு கைகால்களை முடக்குவது, முறிப்பது, நோயை உண்டாக்குவது, பைத்தியமாக்குவது, கணவன் மனைவியைப் பிரிப்பது, பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளை வரம் கொடுப்பது / தடுப்பது, வியாபாரம் செழிப்பாக வளர / முடக்க என பல்வேறு பிரச்சனைகளுக்கும் நமது சமுதாயத்தை சார்ந்த ஏராளமானோர் மார்க்கத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுகிற மந்திரவாதியை நாடிச்செல்கிறார்கள்.
இன்னும் எத்தனை காலத்திற்கு நமது சமுதாயம் இணைவைப்பிலும் மூட நம்பிக்கையிலும் தங்களுடைய மூளையை அடகு வைத்துக் கொண்டிருக்கும். இந்த நம்பிக்கையின் மூலமாக எதை சாதித்து கொண்டார்கள். மேலும் இந்த தவறான நம்பிக்கையின் மூலமாக இந்த அறியாத மக்கள் பயனடைந்தார்களா அல்லது தங்களுடைய பொருளாதாரத்தை இழந்தார்களா இந்த அறியாமையை பயன்படுத்தி காசு பறிக்கும் கொள்ளை கும்பலை நாம் அடையாளம் காண வேண்டும்.

செய்வினை, சூனியம், தாயத்து என்று ஏமாற்றும் போலி மந்திரவாதிகளை சமுதாயத்திலிருந்து ஒதுக்க வேண்டும். இவர்களால் பயனடைந்தவர்களை விட தங்கள் பொருளாதாரத்தையும் நேரத்தையும் அறிவையும் இழந்தவர்கள் தான் அதிகம். எனவே நம் சமுதாய மக்கள் இவைகளின்பால் தங்கள் கவனத்தை செலுத்தாமல் அல்குர்-ஆனை ஓதுவதிலும் அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களை ஆழ்ந்து சிந்திப்பதிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிகாட்டுதல்களில் இருந்து பெறப்படும் செய்திகளை அறிந்து அதன்படி நடப்பதிலும் நமது சமுதாயம் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டும். அல்லாஹ் அனைத்து முஸ்லிம்களையும் உண்மையான முஸ்லிம்களாக வாழ்ந்து மரணிக்க செய்வானாக !  ஆமின் !
இறைவன் நாடினால்  !            தொடரும்......................

One Response so far

  1. அஸ்ஸலாமு அலைக்கும்...

    ஒருவருக்கு உடல்நிலை பாதிக்க பட்டிருந்தாலோ !
    ஒரு பெண்ணுக்கு இருபது வயது ஆகியும் கல்யாணம் ஆகமளிருந்தாலோ !
    கல்யாணம் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாவிட்டாலோ !
    மனநிலை பாதித்து இருந்தாலோ !
    இதுப்போன்று பல் வேறு காரணங்களால் சைத்தான் ஈசியாக வலிகேடான விசயங்களில் கொண்டு செல்கிறான்.

    ஒருவர்க்கு உடல் நிலை சரியில்லை,வயது ஆகியும் கல்யாணம் நடக்கவில்லைஎன்றாலும்,குழந்தை பாக்கியம் இல்லாவிட்டாலும்,மனநிலை பாதித்து இருந்தாலும் முதலில் அல்லாஹ்வின் பக்கம் நீண்டநேரம் தொழுகைக்குப்பிறகு இருக்கைகளையும் ஏந்தி மனத்துமையிடன் துஆ கேக்கவேண்டும்.

    சிர்க்கான காரியங்களில் இறங்கினால் நிரந்திரா நரக வாசியே !!!

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி