"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
13 பிப்ரவரி 2012

44 நோயாளிகளை கொன்ற "டாக்டர்கள்"

0 comments

ஆந்திராவில் ஜுனியர் மருத்துவர்களின் வேலை நிறுத்தம் நீடித்து வருவதால், சிகிச்சை கிடைக்காமல் இன்று ஒரே நாளில் 44 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திராவில் பயிற்சி மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் உதவித் தொகையை, 40 சதவீதம் அதிகரிக்க வேண்டும். கிராமங்களில் 3 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்பதை ஓராண்டாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2 ஆயிரத்துக்கும் அதிமான பயிற்சி மாணவர்கள் கடந்த சில நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிந்திக்கவும்:-

இவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இதை எல்லாம் வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு அப்பாவி மக்கள் ஜனநாயக வழிகளில் போராட்டம் நடத்தினால் போடா, தடா, தேசிய பாதுகாப்பு சட்டங்களை கொண்டு ஒடுக்கும். மக்கள் போராட்டங்களை ஒடுக்க அரசு பயங்கரவாத படைகளான போலீஸ் மற்றும் ராணுவம் ஏவி விடப்படும். ஆனால் இப்படி ஒரு வேலை நிறுத்தத்தின் மூலம் ஒரே நாளில் 44 அப்பாவி மக்களை கொன்றவர்கள் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது.

இந்த வெள்ளை உடை தரித்த அழுக்கு பிடித்த கயவர்கள் வேலை நிறுத்தம் என்கிற பெயரில் 44 அப்பாவி மக்களை கொன்றிருக்கிறார்கள்.
இதுவும் ஒரு வகையில் பயங்கரவாதம்தான். மக்களுக்கு தேவையான உணவுகளை பதுக்கும் பதுக்கல் வியாபாரிகள், போலி மருந்துக்களை தயாரித்து மக்கள் உயிருக்கு உலைவைக்கும் மருந்து கம்பெனிகள், இதுபோன்று உயிர்காக்கும் பணிகளில் உள்ளவர்கள் செய்யும் வேலை நிறுத்தங்கள் கியவற்றால் பாதிக்கபடுவது ஏழை எளிய மக்களின் உயிர்களே...!

இந்த கயவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் செய்வார்களா ..?

இந்த போலி அரசியல்வாதிகள். இல்லையேல் மக்களே இவர்களுக்கு தண்டனை கொடுக்க முன்வரவேண்டும்.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி