"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
23 பிப்ரவரி 2012

அதிரை நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டுவிழா காட்சிகள்

0 comments













அதிரை, நடுத்தெரு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின், 73-ஆம் ஆண்டு விழா, 22-02-2012 புதன்கிழமை மாலை, பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடை பெற்றது.

நிகழ்ச்சி கராஅத்'துடன் துவங்கியது.

ஜனாப் ஹாஜி. S.K.M. ஹாஜா முகைதீன்.M.A.B.sc,B.T, அவர்கள் நிகழ்சிக்கு தலைமை தாங்கினார்கள்.

அதிரை பேரூராட்சி பெருந்தலைவர் ஜனாப்.,ஹாஜி.S.H.அஸ்லம், துணைப்பெருந்தலைவர்திரு.A.பிச்சை,பேரூராட்சி மன்ற உறுப்பினர்.H.அப்துல் காதர், பட்டுக்கோட்டை உதவி தொடக்க கல்வி அலுவலர் உயர்திரு.M.விஜயகுமார்.M.A.B.Ed, பட்டுக்கோட்டை கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் உயர்திரு. G.சுப்ரமணியன்.M.A.B.Ed. ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.

வழக்கறிஞர் ஹாஜி.A.அப்துல் முனாஃப். B.A.BL, அதிரை பேரூராட்சி மன்ற உறுப்பினர்ஜனாப்.ஹாஜி.H.முஹம்மது இப்ராஹீம்.M.B.A.D.I.T, ஜனாப்.ஹாஜி.N.M.முஹம்மது ஹனீபா, ஜனாப்.M.Z.ஹாஜி.அப்துல் மாலிக், இன்னும் பலர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

அதிரை பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் திரு.V.குமாரவேலு,M.B.A,M.C.A,C.A.B.B அவர்கள் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.

சுமார் 22 முறை ரத்த தானம் செய்தமைக்காக ஜனாப்.A. சாகுல் ஹமீது அவர்களை பாராட்டி கவுரவித்தனர்.

மேலு ஊர் பெருந்தகைகள்,முக்கியஸ்தர்கள் ஆகியோரும் பாராட்டி கவுரவப் படுத்தப் பட்டனர்.

thanks : adiraiexpress

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி