உணர்வுகள் வெறிப்பிடித்து;
உயிர்களைத் தினம் குடித்து;
கர்பிணியின் கருவறுத்து;
ஊடகங்கள் வாயடைத்து;
எரித்து அழித்துக் கொன்ற
இனம் மண்ணுக்குள் மக்கி!
குரோதத்திற்கு வழிக்கொடுத்து;
கலவரத்திற்கு இடம் கொடுத்து;
ஆட்சிக்குள் ஒளிந்து;
இரத்த வேட்கைக் கொண்டு
நரபலிகேட்கும் மோடி;
தலையெடுக்கத் தலையசைத்த
தலைமையில் உள்ள பேடி!
இனம் காக்க;
குருதிக் கொதிக்க;
குரல் கொடுக்க;
தேசம் தாண்டிப்
பாசம் காட்டும்
என் சமுதாயமே;
ஒரு தேசத்தில் இருந்து;
தட்டிக்கேட்கத் துணிவில்லாமல்
தலைக்குனிந்து நீ ஊமையாகி;
மனம் ஊனமானதேனோ!
ஆக்கம் :- யாசர் அரஃபாத்