பிப்ரவரி 27 : ஈரான் நாட்டின் மீது போர் தொடுத்தால், இஸ்ரேல் என்ற நாடே இல்லாமல் போய்விடும்" என்று ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானின் அணு உலைகள் மீது கட்டுப்பாடு விதிக்க அமெரிக்கா முயற்சிகள் மேற்கொண்டதால் ஈரான், அமெரிக்கா இடையேயான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது அறிந்ததே. இதன் ஒரு பகுதியாக, இஸ்ரேலும் ஈரானைத் தாக்கப் போவதாகத் தெரிவித்தது.
"எங்களைத் தாக்கி அழித்துவிடலாம் என்று இஸ்ரேல் கருதினால் அது தப்புக்கணக்கு. அப்படி ஒரு தாக்குதல் எங்கள் நாட்டின் மீது தொடுக்கப்பட்டால், இஸ்ரேலை முற்றிலுமாக அழித்துவிடுவோம்." என்ற அமைச்சர் வதீதி எவ்வகையான தாக்குதல் என்பதைத் தெரிவிக்கவில்லை. வளைகுடா பிராந்தியத்தில் ஈரான் அமைச்சரின் பேட்டியால் மேலும் பதற்றம் கூடியுள்ளது.