நமதூரில் அடிக்கடி மின்சாரம் தடை ஏற்படுவதின் காரணமாக நாள் தோறும் வழங்கப்பட்டுவருகின்ற குடிதண்ணீர் இனிமேல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வழங்கப்படும் என பேரூராட்சியின் அறிவிப்பை அடுத்து, ஒரு சில தெருக்களுக்கு குடிநீர் செல்வதில்சிரமங்கள் இருந்தது. மேலும் பொதுமக்கள்கள் படுகின்ற சிரமங்களைக் கருத்தில் கொண்டு, பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக வாடகைக்கு “ஜெனரேட்டர்” களை வைத்து பம்பு மோட்டார்களை இயக்குவது என முடிவு செய்து அதன் பிரகாரம் இயக்கி வருகின்றது.
இதனால் ஏற்படுகிற கூடுதல் செலவினங்களைப் பொருட்படுத்தாமல் பொதுமக்களின் நலனே முக்கியம் என கருதி துரித நடவடிக்கை எடுத்த அதிரை பேரூராட்சியின் செயல் அலுவலர், தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள்அனைவர்களுக்கும் அதிரை வலைதள சகோதரர்கள் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் நல்ல பல ஆலோசனைகளுடன் கூடிய கருத்துகளைப் பதிந்த வலைதள நண்பர்கள் மற்றும் சகோதரர்கள் போன்றவர்களுக்கும் வாழ்த்துகள்.
“ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் “ என்ற பேரூராட்சியின் அறிவிப்பை அடுத்து................................
பேரூராட்சிக்கு போய்ச்சேரும் வகையில் நல்ல பல ஆலோசனைகளுடன் கூடிய கருத்துகளை குறிப்பாக “ஜெனரேட்டர்” பயன்படுத்த பேருராட்சியைக் கேட்டுக்கொண்டு, அதை பின்னூட்ட பகுதியில் பதிந்த வலைதள நண்பர்கள் மற்றும் சகோதரர்கள் அனைவர்களுக்கும் என் வாழ்த்துகள்.