கருவாகி உருவாகி
ஆணும், பெண்ணும் இணைகளில் உயிர் உருவாக காரணமான விந்தணுவும் சினைமுட்டையும் இணையும் நிகழ்வே கருக்கட்டல் என அழைக்கப்படுகிறது. கருக்கட்டப்பட்ட முட்டை கர்பப்பை குழாய் என அழைக்கப்படும் பலோப்பியன் குளாய் பெல்லோபியன் டியூப் வழியாக கருப்பையை சென்றடைகிறது. பின்னர் கர்ப்பப்பையினுள் அது படிப்படியாக வளரத் தொடங்குகிறது.
இதயத்துடிப்பு
ஒரு பெண் கர்ப்பம்தரித்த 21 அல்லது 24-ம் நாளிலிருந்து அந்த கருவுக்குள் இதயத்துடிப்பு நிகழ்கிறது. இதன்மூலமாக அந்த கருவுக்குள் இரத்த ஒட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது
கருதரித்த 28ம் நாள் முதல் அந்த கருவுக்குள் கை, கால்கள், காதுகள் மற்றும் முதுகுத்தண்டுவடம் ஆகியன வளர ஆரம்பிக்கின்றன. ர்ப்பம் தரித்த 30ம் நாள் கருவுக்குள் மூளை வளர ஆரம்பிக்கின்றன
மூளை செயல்பாடு
கர்ப்பம் தரித்த 35ம் நாள் விரல்கள் வளர ஆரம்பிக்கின்றன. கர்ப்பம் தரித்த 40ம் நாள் மூளை செயல்பட தொடங்குகிறது . கருவுற்ற 6-வது வாரம் முதல் கருவின் மூளை கருவை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகிறது.
கருவுற்ற 7-வது வாரம் முதல் பற்களின் தாடைகள் வளர ஆரம்பிக்கின்றன. மேலும் பால்பற்கள் முளைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். கருவுற்ற 8-வது வாரத்தில் கரு மனித உருவத்தில் தென்படும். மேலும் அனைத்து அங்கங்களும் உறுப்புக்களும் கண்டறியப்படுகிறது
கைவிரல் ரேகை
கருவுற்ற 9-வது வாரத்தில் குழந்தையின் கை விரல்களில் ரேகைகள் படர ஆரம்பிக்கிறது. பின்னர் குழந்தை தன் விரல்களை அசைக்க முற்படுகிறது. கருவுற்ற 10-வது வாரத்தில் குழந்தை கர்ப்பப் பையில் உள்ள அமிலங்களை பருக முற்படுகிறது.
கருவுற்ற 11-வது வாரத்தில் குழந்தை உறங்க கற்றுக் கொள்கிறது. பிறகு விழிக்க கற்றுக்கொள்கிறது. இறுதியாக சிறுநீர் கூட கழிகக் ஆரம்பிக்கிறது. அதே சமயம் சுவாச உறுப்புகளை இயக்குவதற்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் இந்த குழந்தை பயிற்சி எடுக்கிறது!
ருசி உணரும் காலம்
கருவுற்ற 13-வது வாரத்தில் குழந்தையின் மர்மஸ்தான உறுப்புகள் தெரிய ஆரம்பிக்கின்றன. மேலும் நாக்கில் ருசியை அறியக்கூடிய நரம்புகள் வேலை செய்கின்றன. கருவுற்ற 14-வது வாரத்தில் குழந்தையின் செவிப்புலன்கள் வேலை செய்ய ஆரம்பிக்கின்றது.
கனவு காணும் காலம்
கருவுற்ற 17-வது வாரத்தில் கண்களில் அசைவுகள் தென்படுகின்றன. குழந்தை கனவு காண முற்படுவதாக அறிவியல் வல்லுனர்கள் தங்கள் ஆய்வில் கூறுகிறார்கள். கருவுற்ற 20-வது வாரத்தில் குழந்தை வெளிச்சத்தை உணர ஆரம்பிக்கிறது. தாயின் வயிற்றினுள் ஏற்படக்கூடிய சப்தங்களை காது கொடுத்து கேட்கிறது. என அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
அசைவுகள் ஆரம்பம்
கருவுற்ற 5-வது மாதத்தில் குழந்தையின் அசைவுகள் நன்றாக வெளிப்படுகின்றது. கருவுற்ற 6-வது மாதத்தில் வியர்வை சுரப்பிகள் முளைக்க ஆரம்பிக்கின்றன. மேலும் உடலில் முடிகள் முளைப் பதற்கான செயல்பாடுகள் நடைபெறுகின்றன
கருவுற்ற 7-வது மாதத்தில் விழிகள் திறந்து மூடுகிறது, குழந்தை சுற்றுமுற்றும் பார்க்கிறது, சுவையை அறிகிறது, தாயின் கர்ப்பப் பையை மெதுவாக தொட்டு உணருகிறது.
முழு வளர்ச்சி
கருவுற்ற 8-வது மாதத்தில் குழந்தையின் மிருதுவான தோல் சருமங்கள் சற்று மேம்பட ஆரம்பிக்கிறது.
கருவுற்ற 9-வது மாதம் முடிவில் அல்லது 270ம் நிறைவில் கருவளர்ச்சியை முழுவதுமாக அடைந்து குழந்தை இந்த உலகில் காலடி எடுத்துவைக்க தயாராகிவிடுகிறது. இது ஒரு சில நாட்கள் முன்னதாகவும் நிகழலாம். ஒருசில தாய்மார்களுக்கு பின்னதாகவும் நிகழலாம்.
எனவே கர்ப்பகாலத்தில் தாய் தனக்கு மட்டும் உணவினை உட்கொள்ளலாமல் கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப உணவு உட்கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் பல்வேறு படிநிலைகளை கடந்து வளரும் குழந்தை ஆரோக்கியமாக இந்த உலகத்தை பார்க்க முடியும் என்பது மருத்துவர்களின் ஆலோசனையாகும். ஏனெனில் கடைசி நிமிடத்தில் கூட எதுவும் நிகழலாம் என்பதால் கருவில் உள்ள குழந்தை இந்த உலகத்தை பார்க்கும் வரை கவனம் அவசியம் என்பதும் மகப்பேறு மருத்துவர்களின் அறிவுரையாகும்.