"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
13 பிப்ரவரி 2012

உங்கள் குழந்தைகளுக்கு அதிக செல்லம் கொடுக்குறிர்களா ?

0 comments
பொதுவாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இழைக்கும் மிகப்பெரிய தீங்கு அதிக செல்லம் கொடுத்து கெடுப்பது தான்.
அது எப்படி கெடுப்பதாகும் என்று நீங்க கேட்கலாம் ஆனால் அவ்வாறு செல்லம் கொடுத்து வளர்ப்பதில் எந்த தவறுமில்லை என்றாலும் அதிகப்படியான செல்லம் அவர்களை பிற்காலத்தில் ஒரு முழு சோம்பேறியாகவும் பொருப்பற்றவனாயும் மாற்றிவிடும்
ஏனெனில் குழந்தைகள் மீதிருக்கும் அன்பின் மிகுதியால் அவர்களை எதுவும்
செய்ய விடாமல் தடுத்து சிலவேளையில் அவர்களின் திறமைகளும் மழுங்கடிக்கப்பட்டு விடுகிறது என்பது தான் உண்மை. அந்நிலைக்கு பெற்றோர்களை காரணம் காட்டாமல் வேறு யாரை குற்றம் சொல்ல முடியும்? குழந்தைகளுக்கு எந்த ஒரு நல்ல பழக்க வழக்களை சொல்லித் தராமல் ஏதோ ஆடு மாடு வளர்ப்பதைப் போல் வளர்க்கும் ஒருசில பெற்றோகள் செய்யும் தவறுகளை பட்டியலிட்டால் மாளாது.

அதற்கு என்ன செய்யலாம் என்றால் குழந்தைக்கு அவன்/அவள் வாழ்க்கைக்கு தேவையான பழக்க வழக்கங்களை சிறு வயதிலிருந்தே கற்றுத் தருவது பெற்றோரின் தலையாய கடமை என்றே சொல்லலாம். வெறும் கல்வியில் மட்டுமே அக்கறை காட்டினால் வேண்டுமானால் அவன் ஒரு சிறந்த கல்விமானாக உருவாக முடியும். ஆனால் வாழ்க்கை என்னும் கல்வியில் அவன் படு பாதாளத்தில் தள்ளப்பட்டிருப்பான் என்பதை பிறகு உணர்ந்து பிரயோசனம் இல்லை.

குழந்தைகளுக்கு பெற்றோர்களின் அன்பு/செல்லம் மிகவும் அவசியம் அதையே ஒரு கருவியாக பயன்படுத்தி அவர்களுக்கிருக்கும் கடமைகளை சின்ன வயதிலிருந்தே சொல்லிக் கொடுக்கும் கலையை பெற்றோர்கள் தெரிந்துக் கொள்வது நல்லது.செல்லம் என்ற ஒரே காரணத்தினால் குழந்தைகளை எதையும் செய்ய விடாமல் பல் தேய்த்து விடுவதிலிருந்து குளிபாட்டுவதிளிருந்து சோறு ஊட்டுவதிலிருந்து அனைத்தையும் தாயும் தந்தையும் மாறி மாறி செய்துக் கொண்டு "வேண்டாம் போ நானே செய்துக் கொள்கிறேன்" என்று குழந்தைகளே சொல்லும் வரை செய்துக் கொண்டிருந்து விட்டு பிறகு அவனுக்கு/அவளுக்கு எதுவும் தெரியாது என்ற பழியை குழந்தைகள் மீதே போடும் பெற்றோர்களும் இருக்கத தான் செய்கிறார்கள்.

பெற்றோர்கள் தங்களின் சுய நலத்திற்கேற்றபடி குழந்தையை வளர்ப்பது மிகவும் தவறு. பிறந்த ஒவ்வொரு மனித்தனுக்கும் தனித்தனியான கடமைகள் இருப்பதை சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு அதை உணர்த்தியே வளர்க்க வேண்டும். அதற்குத் தான் பெரியோர்கள் ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்ற கேள்வியை நம்மிடத்திலே விட்டுவிட்டாட்கள் போலும். பொதுவாக குழந்தைகள் அதிலும் இந்த காலத்து குழந்தைகள் இரண்டு மூன்று வயதிலேயே எதைச் சொன்னாலும் செய்தாலும் அப்படியே திருப்பி செய்யும் ஆற்றல் படைத்தவர்களாக இருப்பதால் நல்ல பழக்க வழக்கங்களை இந்த வயதிலிருந்தே கற்பிக்க தொடங்கி விட வேண்டும்.உதாரணமாக.

சாப்பாடு விசயத்தில் அதிக கவனம் எடுக்க வேண்டும், நேரம் பற்றாக் குறையினால் அவசர அவசரமாக ஊட்டிவிடுவதை தவிர்த்து அவர்களாகவே சாப்பிடும் பழக்கத்தை ஏற்ப்படுத்த வேண்டும்.கிழே சிந்தினால் பரவாயில்லை போகப் போக சிந்தாமல் சாப்பிட பழக்கிக் கொள்வார்கள்.மேலும் இவ்வாறு தானாக சாப்பிடுவதால் சாப்பாட்டில் ஒரு ஆர்வமும் வந்து விடும் மேலும் சாப்பிடுவதற்கு முன்னாள் கை கழுவதும் சாப்பிட்ட பிறகு கை கழுவிக் கொள்வதிலிருந்து அடிப்படையான சுத்தத்தை கற்றுக் கொள்வார்கள் இதெல்லாம் நாம் ஊட்டி விடுவதால் அவர்களுக்கு தெரிய வாய்ப்பிருக்காது.

அடுத்து அவர்களாகவே பல் தேக்க அனுமதிக்க வேண்டும்,ஆரம்பத்தில் எப்படி பல் தேய்ப்பது என்று சொல்லித் தந்து அதை சரிவர கண்காணிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அடுத்து அவர்களை தானாக குளிக்கவும் சொல்லி தரவேண்டும். இதற்கு கண்காணிப்பு தேவையில்லை மாறாக வாரயிறுதி நாட்களில் பெற்றோர்கள் குழந்தைகளை குளிப்பாட்டுவதில் தவறில்லை.

அதைப் போல் பிறரிடம் அன்பாய் பழகுவதையும் சொல்லித் தரவேண்டும் இல்லாவிடில் குழந்தைகளிடம் ஒரு முரட்டு தன்மை வந்துவிடும் இதனால் பின்னாளில் யாரிடமும் பழகமுடியாமல் தவிப்பார்கள் இந்நிலைக்கு பெற்றோர்களே காரணமாகி விட கூடாது. ஆகவே குடும்பத்தாரிடமும் சுற்றத்தாரிடமும் அன்பாகவும் மரியாதையாகவும் பழக சொல்லித்தரவேண்டும். அதற்கு முன்னுதாரணமாக பெற்றோர்கள் தான் நடக்க வேண்டும்.

மேலும் வீட்டிற்கு வரும் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் திடீர் விருந்தாளிடம்கூட மரியாதையாய் அவர்களை அன்புடன் வரவேற்பதையும் சொல்லித் தருவது மிகவும் அவசியம். இதனால் கூச்ச சுபாவம் மறையும் எல்லோரிடத்திலும் சகஜமாக பழகுவார்கள், என்றாலும் அதற்காக மாமாவிற்கு ஒரு டான்ஸ் ஆடி காட்டு, பாட்டிக்கு பாட்டு பாடி காட்டு போன்ற செயல்களை செய்ய வற்புருத்துவது குழந்தைகளுக்கு அவர்களிடத்தில் வெறுப்புத் தான் வருமே தவிர அவர்களோடு அன்பாக பழக முடியாது என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும்.

அதைப் போல் குடும்பத்திலுள்ள உறவு முறைகளை அதைச் சொல்லி அழைக்கும் பழக்கத்தை சொல்லித் தரவேண்டும் கூட பிறந்த மூத்தவர்களையும் பெற்றோரையும் பெயர் சொல்லி அழைப்பதை வேடிக்கையாகக் கூட அனுமதிக்க கூடாது.

சில பெற்றோர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு குழந்தைகளை அடிப்பது. வெளிநாடுகளில் அதற்கு அனுமதியில்லை என்றாலும் ஒரு சிலர் அத்தவற்றை செய்துக் கொண்டுதானிருக்கின்றார்கள். இது ஒருவகை மனநோய் என்றுக் கூட சொல்லலாம் பிறர் மீதிருக்கும் கோபத்தை மற்றவர் மீது காட்டுவது அதற்கு சில வீடுகளில் குழந்தைகளே இலக்காகி விடுவார்கள், இதுப் போன்ற குடும்பங்களில் வளரும் சில குழந்தைகள் தான் சமுக விரோதிகளாகவும் மாறும் ஆபத்து உள்ளது. ஆகவே பொறுமையை சிறு வயதிலிருந்தே குழந்தைக்கு சொல்லித் தருவது பெற்றோரின் கடமை. உதாரணமாக அவங்களுடைய பொருட்களை தொலைத்துவிட்டாலோ அல்லது வீட்டிலுள்ள பொருளை உடைத்துவிட்டாலோ குழந்தையை போட்டு அடிக்க கூடாது. அவ்வாறு செய்வதால் இழந்த பொருள் மீண்டும் கிடைக்காது என்பதை பெற்றோர் உணர்ந்து அப்பொருளின் முக்கியத்தை அவர்களுக்கு அன்பாய் உணர்த்தினாலே போதும் குழந்தைகள் புரிந்துக் கொள்வார்கள் மீண்டும் அது தொடராமல் அவர்கள் ஜாக்கிரதையாய் இருக்க இந்த அணுகு முறை உதவும்.

அதேப்போல் வீட்டில் ஆண் பெண் என்ற பேதமில்லாமல் குழந்தைகளை வளர்க்க வேண்டும் அம்மாவிற்கு உதவியாய் அப்பாவிற்கு உதவியாய் சின்ன சின்ன வேலைகள் செய்வதை சொல்லிக் கொடுக்க வேண்டும். மேலும் வீட்டில் அனாவசியமாக லைட் எரிவதையும் ஃபேன் சுற்றிக் கொண்டிருப்பதையும் சரியாக மூடப்படாத குழாய் போன்ற் விசயங்களை சுட்டிக் காட்டி அதை நிறுத்தவும் அதனால் ஏற்படூம் மின்சார சேதம் பொருட் சேதம் பற்றியும் சொல்ல வேண்டும் இதனால் வீட்டிலிருக்கும் பொருட்கள் மீதும் பொருபுணர்ச்சியை கற்றுக் கொள்வார்கள்.

இவ்வாறு எதையும் அன்பாக அவர்களுக்கு புரியும் விதத்தில் பொருமையாகவும் சொல்லித் தருவது அவசியம்.ஒரு சிறிய தீக்குச்சியால் அடுப்பையும் பற்ற வைக்கலாம் மிகப் பெரிய காட்டையும் அழிக்கலாம் என்பதைப் போல் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் வைத்திருக்கும் அன்பைக் கொண்டெ அவர்களை தலைச் சிறந்த மனிதநேயம் மிக்க சிறந்ததொரு மனிதனாய் உருவாக்கிட முடியும். குழந்தைகளுக்கு வெறும் படிப்பைத் தான் பள்ளிக் கூடம் கற்பிக்குமே தவிர வாழ்க்கை என்னும் பாடத்தை வீடு தான் கற்றுத்தர வேண்டும் என்பதை பெற்றோர்கள் உணர்ந்தாலே போதும் பிறகென்ன வலுவான மகிழ்ச்சியான வருங்காலம் நிச்சயம் அவங்க குழந்தைகளுக்கு உண்டு என்பது உருதி.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி