"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
24 பிப்ரவரி 2012

அதிரை அல் அமீன் பள்ளி : நீண்ட விவாதத்தில் சுமூக முடிவு !

0 comments
அதிரை "அல் அமீன் ஜாமிஆ பள்ளி நல்லிணக்க குழு " சார்பாக இன்று அஸர் தொழுகைக்குப் பின் நமதூர் தரகர் தெருவில் உள்ள “முகைதீன் ஜும்ஆ பள்ளி“வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஹாஜி S.M.A. அக்பர் ஹாஜியார் அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார்கள்
இக்கூட்டத்திற்குப் அதிரை பேரூராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) சார்பாக அதன் நிர்வாகிகள், அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிர்வாக கமிட்டி உதவித் தலைவர், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு முஸ்லீம் லீக், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், இந்திய தவ்ஹீத் ஜமாத், பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா போன்ற அதிரையைச் சார்ந்த இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் பங்களிப்புடன் இனிதே ஆரம்பமானது.

நிகழ்ச்சியின் நிரலாக....................
1. அல் அமீன் ஜாமிஆ பள்ளி சம்மந்தமான விவாதம் சுமார் 4 மணி நேரங்கள் நீடித்தது குறிப்பிடத்தக்கது.
2. அல் அமீன் ஜாமிஆ பள்ளி சம்மந்தமாக இதுவரையில் கூட்டப்பட்ட ஆறு கூட்டங்களும் தோல்வியில் முடிந்தது என்றும் இந்த ஏழாவது கூட்டம் கண்டிப்பாக வெற்றியாக அமையவேண்டும் என்பதில் அனைவரும் உறுதியாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
3. அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிர்வாக கமிட்டி உதவித் தலைவர் சகோ. அன்சாரி அவர்களின் வழக்குகள் சம்மந்தமான விளக்கங்களுடன் கூடிய உரை சுமார் 1.30 மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது குறிப்பிடத்தக்கது.
4. அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிர்வாகம் சார்பாக வழக்கு சம்மந்தப்பட்ட குறிப்புகள் அடங்கிய நகல்கள் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளிடமும் கொடுக்கப்பட்டது.
5. இப்பள்ளி அமைய மர்ஹூம் M.M.S. அப்துல் வஹாப் சாச்சா அவர்கள் எவ்வாறு உதவி புரிந்தார்கள் என்பதை அதிரை பேரூராட்சி தலைவர் சகோ. அஸ்லாம், அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிர்வாக கமிட்டி உதவித் தலைவர் சகோ. அன்சாரி , அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) தலைவர்M.M.S. சேக் நசுருதீன் போன்றோர்கள் சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.
6. அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) செயலாளர் பேராசிரியர் சகோ. முகமது அப்துல் காதர், அதிரை பேரூராட்சித் தலைவர் சகோ. அஸ்லாம் மற்றும் உறுப்பினர்கள் சகோ. இப்ராகிம், சகோ. செய்யது, சகோ.காதர், ஹாஜி S.M.A. அக்பர் ஹாஜியார், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக பொருளாளர் சகோ. செய்யது, சகோ. சாகுல் ஹமீது, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி சகோ.அன்வர் அலி ஆகியோர்கள் உரைகள் நிகழ்த்தி அல் அமீன் ஜாமிஆ பள்ளி கட்டவேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டப்பட்டது.

7. நிகழ்ச்சிகளை தரகர் தெரு “முகைதீன் ஜும்ஆ பள்ளி“ நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து இருந்தனர்.


கூட்டத்தின் தீர்மானம் :
அல் அமீன் ஜாமிஆ பள்ளி சம்மந்தமான வழக்குகள் கோர்ட்டில் இருப்பதால் அதிரை அல் அமீன் ஜாமிஆ பள்ளி மற்றும் அதிரை பேரூராட்சி ஆகியோர்கள் தங்களின் சட்ட ஆலோசகர்களின் உதவியுடன் தங்களால் போட்டப்பட்ட வழக்குகளை இரு தரப்பினரும் வாபஸ் பெறுவது என்றும் இதற்காக அல் அமீன் ஜாமிஆ பள்ளி நிர்வாகத்திற்கு இரண்டு மூன்று நாள்கள் கால அவகாசம் எடுத்துக்கொண்டு சுமூக முடிவை எடுக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடப்பட்டது. இத் தீர்மானத்திற்கு ஆதரவாக அனைத்து தரப்பினரும் குறிப்பாக அதிரை பேரூராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிர்வாக கமிட்டி உதவித் தலைவர் சகோ. அன்சாரி, அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) சார்பாக தலைவர் M.M.S. சேக் நசுருதீன், செயலாளர் பேராசிரியர் சகோ. முகமது அப்துல் காதர், பொருளாளர் சகோ.ரகத் அலி மற்றும் அதிரை இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் கையொப்பமிட்டு உறுதிசெய்தனர்.



நிகழ்ச்சியின் இறுதியாக துவாவுடன் இனிதே நிறைவு பெற்றது.

பதிப்பு : - அதிரை எக்ஸ்பிரஸ்

ஆக்கம் : - சேக்கனா M. நிஜாம்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி