நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும் யோசனையைக் கேளுங்கள்.
இஷா தொழுகைக்கு முன்பு தூங்குவதும், இஷாவிற்கு பின்பு வீண் பேச்சு பேசுவதும் கூடாது.
காலைத் தூக்கம் கவலையின் தொடக்கம்:
சூரிய உதயம் ஆகியும் கூட, யார் ஒருவர் எழவில்லையோ, அவரது வீட்டில் வறுமை தாண்டவமாடும் என்கிறார் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.
சூரியன் உதித்து விட்டால், நபிகள் நாயகம் அவர்கள் எழுந்து விடுவார்கள். ""காலை பஜ்ரு (தொழுகை) நேரம் தூங்கிக் கொண்டிருப்பது வாழ்க்கையில் தரித்திரியத்தை (ஏழ்மையை) உண்டாக்கும்,'' என்று கூறும் அவர்கள் காலை நேரத்தின் சிறப்பையும் எடுத்துச் சொல்கிறார்கள்.
ஒரு சமயம் அவர்கள் ""எனது உம்மத்தினருக்கு (பின்பற்றுவோர்) பரக்கத்தான (சிறப்பான) ஒரு நேரம் உள்ளது. இந்த நேரத்தில் அபிவிருத்தி ஏற்படுகின்றது,'' என்றார்கள். இதுகுறித்து அண்ணலாரிடம் ஒருவர், ""அது எந்த நேரம்?'' என்றார்கள். ""காலை பஜ்ர் நேரம் தொழுகை தொடக்கத்தில் இருந்து கதிரவன் உதிக்கும் நேரம் வரை,'' என அவர்கள் பதிலளித்தார்கள்.
அதிகாலையில் மகிழ்ச்சியுடன் எழுவதற்கு என்ன வழி:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும் யோசனையைக் கேளுங்கள்.
இஷா தொழுகைக்கு முன்பு தூங்குவதும், இஷாவிற்கு பின்பு வீண் பேச்சு பேசுவதும் கூடாது.
உங்களில் எவரேனும் தூங்கிவிட்டால் ஷைத்தான் அவருடைய பிடரியின் மீது மூன்று முடிச்சுகளை போட்டு ஒவ்வொரு முடிச்சிலும் (அவருடைய உள்ளத்தில்) இன்னும் நீண்ட இரவு மீதமிருக்கிறது. நீ நன்றாக தூங்கு என்று ஊதிவிடுகிறான். ஆனால் அம்மனிதர் விழித்து அல்லாஹ்வை திக்ரு செய்வாரானால் ஒரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. பிறகு அவர் ஒளு செய்வாரானால் மற்றொரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. மேலும் அவர் தொழுதால் மூன்றாம் முடிச்சும் அவிழ்ந்து விடுகிறது. அவர் அதிகாலையில் தெளிவான உள்ளத்துடன் மகிழ்ச்சியுடன் எழும்பிவிடுகின்றார்.
அவ்வாறல்லாமல் அவர் விழிக்கவுமில்லை, ஒளு செய்யவுமில்லை, தொழவுமில்லையானால் அன்றைய காலைப் பொழுதில் சோம்பலுடையவராக கெட்ட மனமுடையவராக விழித்தெழுகின்றார்.விடியும் வரை தொழாமல் தூங்குகிறவரின் செவியில் ஷைத்தான் சிறுநீர் கழிக்கின்றான்.
குழந்தைகள் 9 மணி நேரம் தூங்க வேண்டும்:
இரவில் சுமார் 9 மணி நேரம் தூங்காத குழந்தைகள் பள்ளியில் பாடங்களை கவனிக்க சிரமப்படுவார்கள் என்கிறது ஒரு ஆய்வு.
இரவில் நன்றாக நிம்மதியான உறக்கத்தைப் பெறும் பிள்ளைகள் காலையில் உற்சாகமாக பள்ளிக்குக் கிளம்புகின்றன. அதேப்போல பள்ளியிலும் பாடங்களை உடனுக்குடன் புரிந்து கொள்கின்றன.
அதே சமயம், சரியான தூக்கம் இல்லாத குழந்தைகள் பள்ளியில் சக தோழர்களுடன் சரியாக பழக முடியாமலும், ஆசிரியர் நடத்தும் சிறிய கணக்குகளைக் கூட புரிந்து கொள்ள முடியாமலும் அவதிப்படுவார்கள்.
ஒவ்வொரு நாளும் அதிக பாடங்களைப் படித்துவிட்டு இரவில் தாமதமாகத் தூங்கி அதிகாலையில் சீக்கிரம் எழுந்து பள்ளிக்குச் செல்லும் நிலை தற்போது உள்ளது. ஆனால் அது பிள்ளைகளின் அறிவு வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உண்மை.
நல்ல உறக்கமே மாணவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு இன்றியமையாததாகிறது. அது சீராக கிடைக்கும்பட்சத்தில் மாணவர்கள் படிப்பில் மிளிர்வார்கள்.
தற்போதெல்லாம் மாணவர்கள் பல மணி நேரங்களை டிவி பார்ப்பதிலும், கணினி விளையாட்டுகளிலும் செலவிட்டு உறக்கத்தை கெடுத்துக் கொள்கின்றனர். இதனால் தூக்கம் கெடுவது மட்டுமல்லாமல் அவர்களது அறிவு வளர்ச்சியும் குறைகிறது என்பது கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு மாணவர் படிப்பில் கவனக்குறைவுடன் செயல்படுகிறார் என்றால் உடனடியாக டியூஷன் அனுப்புவது, சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்வது போன்றவற்றோடு, பெற்றோர் மாணவரின் தூக்க நேரத்தை அதிகப்படுத்தி, டிவி பார்ப்பதையும், கணினி விளையாட்டை குறைப்பதற்கும் முயற்சி மேற்கொள்வதுதான் நல்ல மாற்றத்தை கொடுக்கும்.
=====
உணவைப்போல் தூக்கமும் உடலுக்கு ஊட்டம் தரும் விஷயம் ஆகும்.
தூக்கம் என்பது..சொகுசான விஷயமாகக் கருதப்பட்டு..இப்போது சமூக வாழ்க்கையில் அதன் முக்கியத்துவம் குறைந்துவிட்டது..இரவு முழுதும் வேலை..காலையில் தான் தூக்கம்..அப்படி ஆகிவிட்டது இன்றைய பெரும்பாலான இளைஞர்களுக்கு.
ஒருவனுடைய..சுகம்,துக்கம்,இளைக் கும் தன்மை,பலம், பலவீனம் எல்லாவற்றையும் தூக்கமே தீர்மானிக்கிறது.
மனதிற்கும்..உணர்வுகளுக்கும்.. தொடர்பு இல்லாத போது..நாள் முழுக்க உழைத்து மூளை களைப்புறும்போது..நம் கண்கள் பார்ப்பது..மனதில் பதிவதில்லை.காதுகள் கேட்பது மூளைக்கு செல்வதில்லை.நாள் முழுதும் நாம் சேகரித்த விஷயங்களை செரிக்க மூளைக்கு ஓய்வு வேண்டும்.அது தூக்கத்தால் மட்டுமே முடியும்.
இரவில் சீக்கிரம் படுத்து..காலையில் சீக்கிரம் எழுவது நல்லது.
சராசரியாக ஆறு மணி முதல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்.
தகவல்
கார்கோ அமீன்