அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நமதூரின் சுகாதரத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் நோக்கதில் பேரூராட்சி தலைவர் சகோதரர்.அஸ்லம் அவர்கள் பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் தீமைகளையும் அதை தவிர்க்கவேண்டிய அவசியத்தையும் அதற்க்கு மாற்று வழிகள் என்னவென்று மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரத்தை கடந்த ஒருமாதமாக மக்கள் ஆதரவை பெரும் நோக்கில் பிளாஸ்டிக் பைகளுக்கு எதிராக தனது தொடர் பிரசாரத்தை மேற்கெண்ட செய்தி நாம் அறிந்ததே.
தற்போது பேரூராட்சி மன்றத்தால் அறிவிக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் (05-03-2012) முடிவுரும் நிலையில், பேரூராட்சி தலைவர் சகோதரர். அஸ்லம் அவர்களின் வேண்டுகோள்கிணங்க நாம் அனைவரும் நமதூரின் நலன் கருதி இந்த நல்ல காரியம் வெற்றியடைய முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறு வேண்டுகிறோம்.
குறிப்பு:மேற்குறிப்பிட்ட செயலை மீறுபவர்ககளுக்கு பேரூராட்சி மன்றத்தால் அறிவிக்கப்பட்ட அபராதம் நாளை முதல் அமலுக்கு வருவதால் நாம் அனைவரும் பிளாட்டிக் பைகளின் உபயோகத்தை தவிர்த்து செயல்படுமாறு அன்போடு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
ஆக்கம் : அதிரை.இன்