"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
05 மார்ச் 2012

குழந்தைகளா.....தேர்வுக்கு முன் என்ன செய்ய வேண்டும்?

0 comments

மாணவர்களே, சில நாட்களில் பொதுத் தேர்வுகள் துவங்குகின்றன. தேர்வு எழுதும் முன் என்ன செய்ய வேண்டும் என்பதற்காக, இதோ

உங்களுக்கான சில டிப்ஸ்:
1. தேர்விற்கு படிக்கும் போது, புத்தகத்தை மட்டும் புரட்டி பார்த்தால், பாடம் நினைவில் நிற்காது. எனவே படித்த, ஒவ்வொன்றையும் எழுதிப் பார்க்க வேண்டும். படங்கள் வரைந்து, பாகங்களை குறித்துப் பார்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால் படித்தது மறக்காமல் இருக்கும்.

2. நாம் ஒன்றை செய்யும் போது திட்டமிட்டு செய்தால், அது சிறப்பாக அமையும். எனவே தேர்விற்கு படிப்பதற்கு முன் திட்டமிட்டு படிக்க வேண்டும். உதாரணமாக, ஒரு நாளில் 12 மணி நேரம் படிக்க திட்டமிட்டால், 10 மணி நேரம் படிக்கவும், மீதமுள்ள

2 மணி நேரத்தை, 10 மணி நேரம் படித்ததை நினைவுபடுத்தி பார்பதற்கு பயன்படுத்த வேண்டும்.

3. திட்டமிட்டு படிக்க ஆரம்பித்த பின், இரவில் தூங்கப்போகும் முன், இன்று நாம் திட்டமிட்டதை சரியாக செய்து முடித்துவிட்டோமா என சுயபரிசோதனை செய்ய வேண்டும். இவ்வாறு தினந்தோறும் செய்வதால், என்ன படித்தோம், எவ்வளவு நேரத்தை வீணாக்கினோம் என ஆராய்ந்து நேரத்தை நிர்வகிக்க முடியும்.

4. தேர்விற்கு 1 அல்லது 2 வாரத்திற்கு முன்பே புதியதாக எதையும் படிக்காமல், படித்ததை நினைவு படுத்த வேண்டும்.

5. படிக்கும் போது, நல்ல முறையில் எழுதிவிடுவேன் என்ற நம்பிக்கையோடு படிக்க வேண்டும். கவலை மற்றும் அச்சத்துடன் படிக்க கூடாது.

6. படிக்கும் போது படங்கள், சமன்பாடுகள், சூத்திரங்கள் போன்றவற்றை தனியாக எழுதி வைத்துக் கொண்டால், திருப்புதல் செய்யும்போது உதவியாக இருக்கும்.

7. படிக்கும் போது, டிவி பார்ப்பது, பிறரிடம் பேசிக்கொண்டே படிப்பது, போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

8. தேர்விற்கு முதல் நாள், பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், அடையாள அட்டை போன்றவற்றை தயாராக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

9. தேர்விற்கு பழகிய பேனாக்களையே பயன்படுத்த வேண்டும். அப்போது தான் வேகம் கிடைக்கும்.

10. தேர்விற்கு அவசரமாக செல்லாமல் சரியான நேரத்தில் தேர்வு அறைக்கு செல்வது நல்லது.

மாணவர்களே தேர்வு எழுத தொடங்கும் முன் எந்தவித பதட்டமும் இன்றி கேள்வித்தாளை நன்கு படித்த பின் தேர்வெழுத துவங்குங்கள்.

தேர்வுக்கு தயாராகுங்கள், நல்ல மதிப்பெண்களை பெற்று வெற்றி பெறுங்கள்.


Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி