இன்று ( 18-03-2012 ) அதிரை “வெஸ்டர்ன் கிரிக்கெட் க்ளப்” ( WCC ) சார்பாக நடத்தப்படும் மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டியின் முதலாவது ஆட்டத்தை “வெஸ்டர்ன் கிரிக்கெட் க்ளப்” ன் முன்னால் கேப்டன் மற்றும் வீரர்கள் சகோ. முகமது மொய்தீன், அயூப்கான், தமிம் அன்சாரி ( பாட்ஷா ) மற்றும் பிஸ்மில்லாகான் ஆகியோர்கள் இனிதே துவக்கி வைத்தார்கள். இன்று முதல் ஆட்டமாக KCC அதிரை மற்றும் XXX மிலாரிக்காடு அணியினர்கள் பங்குபெற்று போட்டி ஆரம்பமானது.
இத்தொடர் போட்டியில் பங்குபெறும் அணிகள் விவரம் :
அதிரையைச் சார்ந்த WCC , AFCC, KCC, SYDNEY, RCCC, ABCC, ASC, போன்ற உள்ளூர் அணிகளும், மேலும் XXX மிலாரிக்காடு, வேதாரண்யம், நெய்வேலி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பாப்பாநாடு, புதுப்பட்டினம், கறம்பக்குடி, முல்லாங்குறிச்சி, தம்பிக்கோட்டை, மறவக்காடு, மன்னாங்காடு, வடகாடு, எட்டாம்புலிகாடு போன்ற வெளியூர் அணிகளும் பங்கு பெற உள்ளனர்.
இத்தொடர் போட்டி இன்று ( 18-03-2012 ) முதல் வருகிற ( 25-03-2012 ) வரை நடைபெறும்.