"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
09 ஏப்ரல் 2012

வாழ்வை ரசிக்கட்டும் நம் குழந்தை !

0 comments

காலை எழுந்த உடன் டியூஷன், பின்னர் பள்ளிக்கூடம், பள்ளிக்கூடத்திலும் பரீட்சை, ஆசிரியர்களின் கண்டிப்புகள்,
மாலை மீண்டும் டியூஷன், வீடு திரும்பியதும் பெற்றோரின் வற்ப்புறுத்தல் பேரில் மீண்டும் படிப்பு, ஹோம் வொர்க்......

இப்படி, படிப்பு மட்டுமே வாழ்க்கை என்கிற சிந்தனை குழந்தைகளின் மனதில் பதிகிற காரணத்தால் , அந்த படிப்பில் அவர்கள் கோட்டை விடுகிற சமயத்தில், அதை அவர்களால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.
சிலர், தங்களையே அழித்துக்கொள்ளவும், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மீது வெறுப்பை காட்டவும் இந்த தவறான சிந்தனையே காரணமாக இருக்கிறது.

படிப்பு மட்டும் தான் வாழ்க்கை என்கிற சித்தாந்தத்தை முதலில் பெற்றோர்கள் களையுங்கள்.

பாடபடிப்பை தவிர இன்னும் ஏராளமான விஷயங்கள் இந்த உலகில் உள்ளன, வாழ்க்கை என்பது பள்ளிகல்வி மட்டுமே அல்ல, என்கிற எண்ணத்தை பெற்றோர்கள் நம் குழந்தைகள் மனதில் விதைக்க வேண்டும்.
படிப்பு, படிப்பு என்று இருந்த காலம் மலையேறி விட்டன.. இந்த தலைமுறை குழந்தைகளை வாழ்வை ரசிக்க கூடியவர்களாக மாற்ற வேண்டிய கடமை பெற்றோர்களாகிய நமக்கு உள்ளது ! 

மேலும்,
முந்தைய காலங்களில் குழந்தைகள் வெளி விளையாட்டுகளில் அதிகம் ஈடுபடுபவர்களாக இருந்தனர். அதில் தோல்வியும் வெற்றியும் மாறி மாறி ஏற்படும். ஒரு முறை தனது நண்பன் தோற்றால் மற்றொரு முறை தானும் தோற்போம் என்பதை நிதர்சனத்தில் கண்டு கொள்ளும் குழந்தைகள், வெற்றியும் தோல்வியும் சகஜமான ஒன்று தான் என்பதை உள ரீதியாகவே புரிகிறார்கள்.

ஆனால், இன்றைக்கோ குழந்தைகளின் விளையாட்டு முழுவதுமே கம்பியூட்டர் கேம்ஸ் என்று ஆகி விட்டது. அதில் தோல்வி பெறப்போகிறோம் என்கிற நிலை வரும் போது உடனே கட் செய்து மீண்டும் துவக்கத்தில் இருந்து விளையாட்டை ஆரம்பிகிறார்கள்.
இதன் மூலம், தோல்வியை ஏற்றுக்கொள்ள கூடிய மனப்பக்குவம் இன்றைய தலைமுறையினரிடத்தில் குறைந்து வருகிறது !
இது உண்மையில் வேதனையான விஷயம் என்று சொல்வதை விட மிகவும் ஆபத்தான ஒரு விஷயம் !!


அன்புடன், நாஷித் அஹமத்
السلام عليكم ورحمة الله وبركاته

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி