"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
29 ஜூலை 2011

உணவுக்காக கூட ஆசிரியர், மாணவர்கள் வெளியே செல்லத் தடை!

0 comments
கடலூர் : சமச்சீர் கல்வியை அமல்படுத்த வலியுறுத்தி, மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட போவதை அறிந்த அரசு மதிய உணவுக்காக கூட பள்ளியிலிருந்து வெளியில் செல்ல திடீர் தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் சமச்சீர் கல்வித்திட்டத்தை ரத்து செய்த அதிமுக அரசு. பாடப்புத்தகங்களை விநியோகிக்கவும் தடை விதித்தது. ஆனால் உயர்நீதிமன்றம், சமச்சீர் கல்வித் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது. அந்த தீர்ப்பை ஏற்காமல் அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இதனால், பள்ளி திறந்து இரண்டு மாதங்களாகியும் பாடதிட்டம் எது என அறிய முடியாமலும் மாணவர்கள் கடும் சிரமப்படுகின்றனர். இதை கண்டித்து, பள்ளிக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் சமச்சீர் கல்வித் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டங்களை அறிவித்துள்ளன.

உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று உடனடியாக புத்தகங்கள் வழங்க வலியுறுத்தி மாணவர்கள், ஆசிரியர்கள் நாளை வகுப்புகளை புறக்கணிக்குமாறு திமுக அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆசிரியர்களும் மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து போராடவும் தயாராகி வருகின்றனர். இதை உளவுத்துறை மூலம் தகவல் அறிந்த தமிழக அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கல்வித்துறை அதிகாரிகள், அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களையும் போன் மூலம் தொடர்பு கொண்டு காலையில் பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள், மாணவர்கள் மாலை வகுப்பு முடியும் வரை எந்த காரணத்தை கொண்டும் வெளியே செல்லக்கூடாது. மதிய உணவை கையிலேயே எடுத்து வந்துவிட வேண்டும். மதிய உணவை காரணம் காட்டியும் வெளியே செல்லக்கூடாது. மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மறு உத்தரவு வரும் வரை இந்த உத்தரவை அனைத்து பள்ளிகளும் அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

இந்த உத்தரவை கேட்டு ஆசிரியர்களும் மாணவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். மாணவர்களின் போராட்டத்தை இந்த உத்தரவின் மூலம் ஒடுக்கிவிட அரசு முடிவு எடுத்துள்ளது. தமிழக அரசு மிரட்டல் போக்கை கைவிட்டு உடனடியாக சமச்சீர் கல்வி பாடபுத்தகங்களை வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நன்றி:இந்நேரம்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி