அதிரை பைத்துல் மால் குவைத் கிளையின் சார்பில் வெள்ளிக் கிழமையன்று நடைபெற்றது.
அதிரை பைத்துல் மால் குவைத் கிளையின் சார்பில் மாதம்தோறும் இரண்டாவது வெள்ளிக் கிழமையன்று ஆலோசனை மற்றும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்று வருகிறது. ரமளான் மாதத்தில் இஃப்தார் நிகழ்ச்சியும் சேர்ந்தே நடைபெற்று வருகிறது. இதுதவிர, குவைத் கிளையின் நிர்வாகிகள் ஆண்டுதோறும் ரமளான் மாதக் கூட்டத்தின்போது தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்த ஆண்டின் ரமளான் மாதக் கூட்டம் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சிகள் சால்மியா என்ற பகுதியில் உள்ள பூங்காவுக்கு எதிரில் நடைபெற்றது. இதில் பின்வரும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
தலைவர் - ஜைனுல் ஹுசைன் (ஆலடித் தெரு)
செயலாளர் - மௌலவி, ஹாஃபிள் நிஜாமுத்தீன் பாகவிய் (புதுமனைத் தெரு)
துணைத் தலைவர் - கமருஜ்ஜமான் (காளியார் தெரு)
துணைச் செயலாளர் - முஹம்மது தமீம் (மேலத் தெரு)
மக்கள் தொடர்பு - அப்துல் கரீம் (ஆஸ்பத்திரி தெரு)
நிர்வாகிகள் தேர்வு முடிந்தவுடன் இந்த ஆண்டின் ஜகாத் மற்றும் ஃபித்ராவின் அவசியம் மற்றும் அவற்றைப் பெறத் தகுதியானவர்கள் குறித்து மௌலவி நிஜாமுத்தீன் பாகவி அவர்கள் உரையாற்றினார்கள்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தங்களின் ஃபித்ரா மற்றும் ஜகாத் பங்களிப்புகளை வழங்கினார்கள்.