"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
10 ஆகஸ்ட் 2011

அய்டா(AYDA)வின் இஃப்தார் நிகழ்ச்சி (வீடியோ)

0 comments
சவூதி அரேபியாவின் துறைமுக நகரான ஜித்தாவில் கடந்த ஞாயிறு (07-08-2011) அன்று அய்டா(AYDA)வால் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த இஃப்தார் நிகழ்ச்சி சிறப்புற நடைபெற்றது,



நிகழ்ச்சிக்கு சகோதரர் (கசும்சப்பா) பஷீர் முன்னிலை வகிக்க, சகோதரர் ஜஃபருல்லாஹ் (ஆஸ்பத்திரிதெரு) தலைமை ஏற்று தொகுத்து வழங்கினார். சிறுமி நூருல் சபீலா கராஅத் ஓத, சகோதரர் இப்ராஹீம் வரவேற்புரை வழங்கினார்.


அய்டாவின் தலைவர் ஷம்சுத்தீன் அய்டாவின் துவக்கம் மற்றும் முன்னேற்றத்திற்க்காக உழைத்தவர்கள் பற்றி நினைவு கூறி, விளக்கமளித்தார். இறுதியில் அய்டாவின் செயலாளர் அப்துல்காதர் (ஜெய்லானி) நன்றி நவில இரவு உணவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.


ஊரில் இருந்து புனித உம்ரா பயணம் வந்தவர்களும் கலந்துகொண்டனர்.

நமதூர் சகோதரர்கள் சுமார் 146 பேர் குடும்பத்துடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

பதிப்பு : அதிரை எக்ஸ்பிரஸ்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி