தேவையானவை:
ப்ரெட் துண்டுகள் - 6 சிறியது
சிக்கன் கீமா - 150 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை+கால் டீஸ்பூன்
கடலை மாவு - அரை கப்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 1
மல்லி, புதினா - சிறிது
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
1. சிக்கன் கீமாவை நன்கு அலசி தண்ணீர் வடிகட்டிக் கொள்ளவும். கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு நறுக்கிய மிளகாய், மல்லி புதினா சேர்த்து புரட்டவும். சிக்கன் சேர்க்கவும். அதனுடன் மஞ்சள், மிளகாய்த் தூள்களைச் சேர்க்கவும்.
2. நன்கு பிரட்டி மூடி போட்டு தண்ணீர் சுண்டும் வரை வேகவிடவும். சிக்கன் கீமா மசாலா ரெடி.
3. பிரட்டின் ஓரத்தைக் கட் செய்து கொள்ளவும். ஒரு ப்ரெட் துண்டில் ரெடி செய்த சிக்கன் கீமா மசாலாவை வைத்து இன்னொரு ப்ரெட்டால் மூடி மெதுவாக அழுத்தி வைக்கவும். அதனை குறுக்கே கட் செய்து வைக்கவும்.
4. ஒரு பவுலில் அரை கப் கடலை மாவு, கால் ஸ்பூன் மஞ்சள் தூள், கால் ஸ்பூன் மிளகாய்த் தூள், சிறிது உப்பு சேர்த்து தளர்வாய் கரைத்துக் கொள்ளவும். மாவு உள்ள பவுலில் தயார் செய்த ப்ரெட் துண்டை வைத்து ஸ்பூனால் மாவை எடுத்து பிரெட் மீது விடவும்.
5. கடாயில் தேவைக்கு எண்ணெய் காய வைத்து காய்ந்தவுடன் மாவில் தோய்த்த ப்ரெட் துண்டைப் போட்டு இருபுறமும் பொரித்து எடுக்கவும்.
6. பொரித்ததை எடுத்து பேப்பர் டவலில் வைக்கவும். சுவையான சிக்கன் ப்ரெட் பக்கோடா ரெடி.
சிறிய துண்டாக கட் செய்து அலங்கரித்துப் பரிமாறலாம்.
ஆக்கம் : சகோதரி ஆசியா உமர்
பதிப்பு : அதிரை எக்ஸ்பிரஸ்