இறைவனுக்கு மட்டும் உரிய பெருமை யாரிடம் இல்லையோ யார் அதை முற்றிலுமாக தடை செய்து கொள்கின்றாரோ அவருக்கு கீழ்காணும் இன்பம் மிகுந்த சுவனம் வேறெந்த செயலாலும் தடைப்படாது என்று இறைவனின் இறுதித்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
'இரண்டு சொர்க்கங்கள் உண்டு. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும் வெள்ளியால் ஆனவை (வேறு) இரண்டு சொர்க்கங்களும் உள்ளன. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும் பொன்னால் ஆனவையாகும். 'அத்ன்' எனும் சொர்க்கத்தில் இருப்பவர்கள் தங்கள் இறைவனைக் காண்பதற்கு, அவன் மேலுள்ள 'பெருமை' எனும் மேலாடை தவிர வேறெந்தத் தடையும் இராது. என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' புகாரி 7444.
பூமியில் ஆணவத்தையும், குழப்பத்தையும் விரும்பாதவர்களுக்காக அந்த மறுமை வாழ்வை ஏற்படுத்தியுள்ளோம். நல்ல முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே. திருக்குர்ஆன் 28: 83.
அன்புள்ள சகோதரர்களே ! யாருக்காவது தான் ஒருப் பெரிய ஆள் என்றப் பெருமை இருந்தால் இந்தப் புனித ரமலான் மாதத்தில் தவ்பா செய்து விடுங்கள், பதவி வந்தப் பிறகு அதிகாரத்தைப் பயன்படுத்தி தனக்கு கட்டுப்படாத, கீழ்படியாத யாரையாவது அதிகார துஷ்பிரயோகம் செய்திருந்தால் இந்தப் புனித ரமலான் மாதத்தில் தவ்பா செய்துவிட்டு சம்மந்தப்பட்டவரை சந்தித்து வருத்தத்தை தெரிவித்துக் கொள்ளுங்கள்,பணமும் புகழும் வந்தப் பின்னர் பழைய தோழர்களை புறக்கனித்திருந்தால் இந்தப் புனித ரமலான் மாதத்தில் அவர்களை சந்தித்து முகமன் கூறி இணைந்து விடுங்கள், தன்னிடம் குவிந்துள்ள பொருளாதாரத்தால் ஆடம்பர வாழ்க்கையை அமைத்துக்கொண்டு ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினருக்கு மன உலைச்சலைக் கொடுத்திருந்தால் இந்தப் புனித ரமளான் மாதத்தில் தவ்பா செய்து விட்டு பெரும் செல்வந்தர் அப்துல்ரஹ்மான் இப்னு அவஃப்(ரலி) அவர்களின் எளிய வாழ்க்கையை நிணைவு கூர்ந்து திருந்திக் கொள்ளுங்கள்.
எழுதியதுப் போன்று என்னையும், வாசித்ததுப் போன்று உங்களையும் அமல் செய்யும் நன் மக்களாக வல்ல அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக !
அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும்,ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். திருக்குர்ஆன் 4:36.
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.திருக்குர்ஆன் 3:104