"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
27 ஆகஸ்ட் 2011

புனித மக்காவில் லைலதுல் கத்ர் இரவு:இரண்டு மில்லியன் மக்கள் பிரார்த்தனை...

0 comments

புனித ரமலானின் க்ளைமாக்ஸ் இரவான லைலதுல் கத்ர் (27 ஆம் இரவை)சிறப்பிக்கும் வண்ணம் சுமார் இரண்டு மில்லியனுக்கு மேல் புனித மக்காவில் உலகெங்குமிருந்து வந்த யாத்ரீகர்கள் ஒன்று கூடினர். சென்ற வருடத்தை விட இவ்வருடம் தலை பிறையிலிருந்தே புனித மக்காவில் உம்ரா யாத்ரீகர்களின் கூட்டம் அலை மோத துவங்கிவிட்டது.

அதன் அடிப்படையில் நேற்று (26.08.2011) வெள்ளிக்கிழமை பின்னேரம் (சவூதி கணக்குப்படி ரமளான் பிறை 27 ஆம் இரவில்) தராவிஹ் மற்றும் க்யாமுள் லைல் தொழுகையை கணக்கில் கொண்டு, வெள்ளிக்கிழமை காலை முதலே மக்கள் கூட்டம் புனித கஃபாவை சுற்றி தஞ்சம் அடைய துவங்கிவிட்டன.


வெளிநாட்டு யாத்ரீகர்களின் பாதுகாப்பை கணக்கில் கொண்டு, சவூதி அரசு பல பாதுகாப்பு ஏற்பாடுகளை புனித மக்காவை சுற்றி செய்திருந்தது. அதன் வகையில் வாகனங்களுக்கு வழக்கமான எல்லையிலிருந்து ஒரு குறிப்பிட்ட எல்லைக்குமேல் அனுமதியில்லை, கூட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மக்கா மற்றும் ஜித்தாவை சுற்றியுள்ள உள்ளூர் வாசிகளுக்கு, மக்காவிற்கு வருவதை தற்போதைக்கு தவிர்க்குமாறு எஸ்.எம்.எஸ் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டன.

நமதூரை சார்ந்தவர்கள் சிலர், புனித உம்ராவை நிறைவேற்ற ஊரிலிருந்தும், பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்திருந்து, இப்புனித இரவை சிறப்பித்ததோடு, இஃதிகாஃப் இருந்து வருகின்றனர்.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி