

அரசின் அரிசியை பெற பலமுறை அலைந்தும், நோன்பு ஆரம்பமாகிவிட்ட நிலையிலும், அரிசியை வழங்க ஆணை கிடைக்கவில்லை!. இதற்காக தினமும் 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தஞ்சாவூரில் அமையப் பெற்றுள்ள கலெக்டர் அலுவலகத்திற்கும், பட்டுக்கோட்டையில் உள்ள TSO அலுவலகத்திற்கும் நோன்பை வைத்துக்கொண்டு அலைய வேண்டிய நிலை!. காலையில் சுபுஹுக்கு பிறகு சென்றால், இரவு 7 மணிக்கு திரும்பவேண்டிய நிலை!.


கேட்டதை எல்லாம் கொடுத்தும்(?), பட்டுக்கோட்டை தாலுகா வழங்கள் அதிகாரி(TSO) சான்று வழங்கியும், தஞ்சாவூரில் உள்ள மாவட்ட வழங்கள் அதிகாரிகளின்(DSO) மெத்தன போக்கினால் மீண்டும் இழுத்தடிக்க ஆரம்பித்துள்ளனர். காரணம் கேட்டால், சென்னையில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் அணுமதி பெறவேண்டும் என்ற பதில் மட்டுமே கிடைக்கின்றது. கலெக்டரின் உதவியாளரிடம் தகவலை கொண்டுசென்றும் பலன் இல்லை!. சுமார் பத்து நோன்பு முடிந்துவிட்ட நிலையிலும், இந்த எட்டு பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்கவில்லை!. இதனால் வேறு வழியின்றி மீண்டும் முதலமைச்சரின் தனி அலுவலகத்திற்கு 9 ஆகஸ்ட் அன்று பேக்ஸ் அனுப்பி தகவலை தெரியப்படுத்தியுள்ளோம்.
இதனால் நாம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அரசு அறிவித்த அரிசியின் அளவு என்ன?. அதை முறைப்படி விண்ணப்பித்த அனைத்து பள்ளிக்கும் வழங்கப்பட்டதா? போன்ற தகவலை பெரும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.
மேலும் நாம் முழுமையாக விசாரணையில் இறங்கியபோது, அதிராம்பட்டினத்தில் உள்ள பள்ளிவாசல்களுக்கு மட்டும் தான் இதுபோன்ற நிலை என்று இல்லாமல், அருகில் உள்ள சேதுபாவா சத்திரம், மதுக்கூர் போன்ற ஊர்களிலும் சில பள்ளிகளுக்கு அனுமதி கிடைத்து, சில பள்ளிகளுக்கு அனுமதி இதுவரை கிடைக்கவில்லை, என்ற தகவல் கிடைத்ததும் அரசின் நோன்பு கஞ்சிக்கு அரிசி வழங்கும் திட்டத்தில், பல குளறுபடி இருப்பதை உணரமுடிந்தது!. மேலும் அரசு சில நல்ல திட்டங்களை அறிவித்தாலும் அரசு அலுவலர்களின் கால தாமதத்தினால் மக்களுக்கு உரியநேரத்தில் சென்று கிடைப்பதில்லை!. நோன்பு பத்து முடிந்துவிட்ட நிலையில் இனி எப்போது அரிசி கிடைக்கும்?. அரசின் நோன்புக்கஞ்சி அரிசி திட்டம், முஸ்லிம்கள் முழுமையாக பெருவதற்குள் நோன்பு முடிந்துவிடும் போலவே தெரிகின்றது!. ஓரு ரூபாய் மதிப்புள்ள அரிசியை பெற, சுமார் பத்து ரூபாய் வரை செலவு செய்தும் இதுவரை கிடைக்கவில்லை!.
சுமார் 800 வருடம் இந்தியாவை ஆட்சி செய்த ஓரு சமுதாயம், ஆட்சி அதிகாரத்தை இழந்து, அரிசிக்கு அலைய வேண்டிய நிலையில் உள்ளதை எண்ணி நம் உள்ளம் வேதனையின் உச்சத்திற்கே சென்றது!. ஆனால் இதை அறிந்து கொள்ளவேன்டிய சமுதாயம் இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதே இந்த அவல நிலைக்கெல்லாம் காரணம்.
இத்திட்டம் சுண்டைக்காய் கால் பணம்!. சுமை கூலி முக்கால் பணம்!! என்ற பழமொழிக்கு ஒத்ததாகவே உள்ளது!. எனவே அரசு இதில் உடனடியாக தலையிட்டு இதில் உள்ள குறைகளை உடனே களையவேண்டும்!. மேலும் இந்த அரிசியை உடனடியாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் இலவசமாகவே கிடைக்க ஆவன செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முஸ்லிம்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும்!.
அதிரையில் அரிசி கிடைக்காத பள்ளியின் பெயர்கள்:
மப்ரூர் பள்ளிவாசல்
பாக்கியாதுஸ் சாலிஹாத் பள்ளி
கடற்கரை தெரு ஜும்மா பள்ளி
தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளி
மக்தும் பள்ளிவாசல்
கலிபா உமர் பள்ளிவாசல்
தவ்ஹீத் பள்ளிவாசல்
அர்ரஹ்மான் பள்ளிவாசல்
மற்றும்
மதுக்கூர் தவ்ஹீத் அறக்கட்டளை பள்ளிவாசல்
சேதுபாவா சத்திரம் பள்ளிவாசல்
நன்றி: அதிரை முஜீப்
நன்றி :அதிரை எக்ஸ்பிரஸ்