"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
21 செப்டம்பர் 2011

அக் 1 முதல் 4 வரை துபாயில் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு

0 comments

துபாயில் வரும் அக்டோபர் 1ம் தேதி இரண்டாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு துவங்குகிறது. இந்த மாநாடு தொடர்ந்து 4 நாட்கள் நடக்கவிருக்கிறது என மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் வி.ஆர்.எஸ். சம்பத் துபாயில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த மாநாடு 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் நடக்கிறது. இதில் இந்தியா உள்பட பல நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள் கலந்து கொள்கின்றனர்.

2ம் தேதி பகல் 12 மணிக்கு புதிய தொழில் வாய்ப்புகள் குறித்தும், 2:30 மணிக்கு திட்டங்களுக்கான நிதி திரட்டுதல் குறித்தும், மாலை 4:30 மணிக்கு வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்தும் உரைகள் நிகழ்த்தப்படும்.

3ம் தேதி காலை 11:30 மணிக்கு இந்தியாவிலும், இதர நாடுகளிலும் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்தும், மாலை 4 மணிக்கு தொழில் வளர்ச்சிக்கான தமிழ் மொழி மற்றும் தகவல் திறன்கள் குறித்த உரைகள் இடம் பெறும்.

இறுதி நாளான 4ம் தேதி காலை 9 மணிக்குபயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த உரைகள் இடம் பெறும். மாலை 4 மணிக்கு விருது வழங்கு விழா, நிறைவு விழா நடைபெறும்.

இறுதி நாள் மாநாட்டில் உலக தமிழர்களுக்கு சேவை புரிந்தவர்களை பாராட்டி அவர்களுக்கு உலகத்தமிழ் மாமணி விருது வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான விருதை மலேசிய தேசிய நில நிதி கூட்டுறவு சங்க செயல் தலைவர் கே.ஆர்.சோமசுந்தரம், ஆஸ்திரேலியா ஸ்பிரிங் பீல்டு நில கார்ப்பரேஷன் தலைவர் மகாலிங்கம் சின்னதம்பி, அமெரிக்கா வேலுச்சாமி என்டர்பிரைசஸ் தலைவர் பி.வேலுச்சாமி, அமெரிக்கா டெக் மகிந்திரா சேவைகள் தலைவர் பால் பாண்டியன், சிங்கப்பூர் இந்திய தொழில் வர்த்தககழக தலைவர் விஜய் அய்யங்கார், அமெரிக்கா ஸ்ரீ மீனாட்சி கோயிலை உருவாக்கிய எஸ்.கண்ணப்பன், யுஎன்ஐடிஓ. தலைமை இயக்குநரின் முன்னாள் முதன்மை ஆலோசகரான ஆஸ்திரியாவை சேர்ந்த வி.ஜெபமாலை, அமெரிக்கா மைல்ஸ்டோன் மெட்டல்ஸ் தலைவர் ஜி.ராம்பிரசாத், பிரிட்டன் சிறுநீரக நிபுணர் பி.சண்முகராஜ் ஆகியோர் பெறுகின்றனர்.

மேலும் மாநாட்டையொட்டி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு தமிழ்ச் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இம்மாநாடு துபாயை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ் நிறுவனமான ஈடிஏ அஸ்கான் நிறுவனத்தின் ஆதரவுடன் நடத்தப்படுகிறது.




ஆஃப்ரின் :முத்துப்பேட்டை

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி