
பெரும்பாலான முஸ்லிம் இளைஞர்கள் வெளிநாடுகளில் வேலை செய்து வருகின்றனர்.இந்தியாவில் வேலை இல்லை என்று முடிவு செய்து கொண்டு வெளிநாடு சென்று மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். பெற்றோர்கள், மனைவி, பிள்ளைகளை பிரிந்து அயல்நாட்டில் கஷ்டப்பட்டு, குடும்பம் என்ற கட்டமைப்பு இல்லாமல் இயந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருகின்றனர்.
கணவன் இருந்தும், இல்லாத நிலையில் வாழும் மனைவி, தந்தை இருந்தும், இல்லாத நிலையில் வளரும் பிள்ளை. மகன் இருந்தும், இல்லாத நிலையில் வாடும் பெற்றோர்கள்.
இந்த நிலையை மாற்ற நாம் என்ன செய்ய வேண்டும்? இந்தியாவில் அரசு துறையிலும், தனியார் துறையிலும் ஏராளமான வேலைவாய்புகள் குவிந்து கிடக்கின்றன. இருந்தும் ஏன் நமக்கு இந்த நிலை?
உள்நாட்டிலேயே பல லட்சம், மாத சம்பளம் தரக்கூடிய வேலைவாய்ப்பினை தேர்ந்தெடுப்பதற்கு நமக்கு போதிய வழிகாட்டுதல்கள் இல்லை. இதை களைவதற்கு தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்ட மாணவரணியின் சார்பாக இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய அக்டோபர் மாதம் 16ஆம் தேதி வேலைவாய்ப்பு வழிகாட்டி முகாம் கோவையில் நடைபெற உள்ளது. இதில்,
அரசு வேலைவாய்ப்பு தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்வது?
Interview செல்வதற்கு முன் கவனிக்கவேண்டிய விசயங்களான Resume எவ்வாறு தாயார் செய்வது? ஆங்கில உரையாடல், வார்த்தை பயன்பாடு, குழு விவாதம்(Group Discussion), ஆங்கில மொழி தொடர்பு போன்றவற்றை பற்றி தெளிவாக விளக்கப்படும்.
IIT, IIM போன்ற உயர் கல்வி நிறுவனங்களின் தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்வது?
மாதம் சில லட்சங்களில் சம்பளம் தரக்கூடிய வேலைகள் எவையெவை
உள்ளிட்ட இன்னும் ஏராளமான வினாக்களுக்கு விடை காண October-16 கோவை நோக்கி புறப்படுங்கள்………
உங்களை அண்டி வாழக்கூடிய மக்களுக்கும்,குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தெரியபடுத்துங்கள். நல்ல வேலையை உள்நாட்டில் தேடி கொண்டிருக்கும் அன்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
கொள்கை உறுதியுடன் கூடிய வளமான வேலைவாய்ப்பினை பெற்றிட அழைக்கிறது.
TNTJ, மாணவரணி, கோவை மாவட்டம்
நிகழ்ச்சி நடைபெறும் இடம்: நல்ஆயன் சமூகக்கூடம், கோட்டை மேடு, கோவை
நேரம்: காலை 10 மணி முதல் 2 மணி வரை…
தொடர்புக்கு:
91501 25010- அஜ்மல்-மாவட்ட மாணவரணி செயலாளர்
91501 25001-ஜலால் அஹ்மத்-மாவட்ட தலைவர்
91501 25002-நவ்சாத்-மாவட்ட செயலாளர்
E-mail: covaitntj@gmail.com