"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
10 செப்டம்பர் 2011

முத்துப்பேட்டை ரஹ்மத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியல் நடத்த இலவச கண் பரிசோதனை முகாம்.

0 comments

முத்துப்பேட்டை ரஹ்மத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியல் நடத்த இலவச கண் பரிசோதனை முகாம்.

முத்துப்பேட்டை ரஹ்மத் மெட்ரிக் மேல்நிலையின் பெற்றோர் ஆசிரியர் கழகம், மதுரை அரவிந்த் கண் மருத்துவனை, முத்துப்பேட்டை சிதம்பர ராமஜெயம் அறக்கட்டளை ஆகியவைகள் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாமானது 7.9.2011 புதன் கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ரஹ்மத் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இம்முகாமில் கீழ்க்கண்ட நோய்க்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டன.

கண்புரை நோய் : பொதுவாக 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கண்ணில் புரை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனை அறுவை சிகிச்சை மூலம் தீர்வு கண்டு மீண்டும் பார்வை பெற முடியும்.

சர்க்கரை நோய் : உள்ளவர்களுக்கு கண் விழித்திரையில் எந்தவிதமான அறிகுறி இல்லாமலே பார்வை இழப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

கண்நீர் அழுத்த நோய் : 40 வயதிற்கு மேல் ஒருவித அறிகுறியும் இல்லாமல் கண் பார்வையை இழக்க வாய்ப்பு இருக்கும்.

கிட்டப்பார்வை, துரப்பார்வை மற்றும் வெள்ளெழுத்து : உள்ளவர்களுக்கு கண் கண்ணாடிகள் மூலமாக துல்லியமாக பார்வை பெற முடியும்.

கண் பரிசோதனை அனைவருக்கும் இலவசமாகவும், பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு நியாய விலையில் கண் கண்ணாடிகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது, கண்ணில் ஆபரேஷன் தேவைப்படுவோர்க்கு தக்க ஆலோசனைகளும் முகாமில் மருத்துவர்களால் வழங்கப்பட்டது. கண் சம்மந்தமாக சில பிரச்சனைகள் உள்ளவர்களும் இம்முகாமில் கலந்துக்கொண்டதாக முகாம் அமைப்பாளர்கள் கூறினார்கள்.

நமக்கு வயது அதிகமாகும் போது பல நோய்கள் நம்மை பாதிக்க வாய்ப்புண்டு, அவற்றில் முக்கியமாக கவனிக்க வேண்டியது நம்முடைய கண்கள் தான். ஆகையால்
இந்த வாய்ப்பினை பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஊர் பொது மக்கள் பெரிதும் பயன்படுத்தி கொண்டனர்.

செய்தி : அபு ஆஃப்ரின்

நன்றி : முத்துப்பேட்டை

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி