"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
10 செப்டம்பர் 2011

அதிரையில் பாதாள சாக்கடை அமைக்க அளவை துவங்கியது...

0 comments
தமிழகத்தில் 559 பேரூராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா கடந்த வாரம் உத்தரவிட்டார்.
அதன்படி அதிராம்பட்டினத்தில் பாதாள சாக்கடை அமைக்க நில அளவை துரிதமாக நடந்து வருகிறது.
நில அளவையை அதிமுக அதிரை நகர துணை செயலாளர் எம்.ஏ.முகமது தமீம் பார்வையிட்டு ஆலோசனை சொன்னபோது எடுத்த படம்.

அதிரையில் நேற்று (08/09/2011) முற்பகல் வரை எடுத்த அளவையின் படி 47 கி.மீ.ஆகும். மொத்தம் 70 கி.மீ வரை இருக்கலாம் என மதிப்பீடுவதாக’’ நில அளவையர் அதிரை போஸ்ட்டிடம் சொன்னார்.

இந்த அளவை அதிரையின் வழிப்பாதைகள் அனைத்தும் ஒன்றும் விடாமல் எடுக்கப்படும்.

பாதாள சாக்கடை திட்டத்தால் ஏற்படும் நன்மைகள்:


பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக அமைத்து பராமரிக்கும் பட்சத்தில், பொதுமக்களின் ஆரோக்கத்துக்கு நிரந்தர பயனளிக்கும். கழிவு நீர், சாக்கடை நீர் திறந்த வெளியில் தேக்கம் தவிர்க்கப்படும். துர்நாற்றம் வீசுவது தவிர்க்கப்படும். வீட்டிற்குள் அமைக்கும் செப்டிக் டேங்க் அவசியமில்லை. கொசுவினால் பரவும் யானைக்கால் நோய் முற்றிலும் தடுக்கப்படும். நோய் பரப்பும் சில பூச்சுகள், கிருமிகள் உற்பத்தியை தடுத்து நோய் பரவுதை தடுக்கலாம். கழிவு நீர் தேக்கத்தால் கிணற்று நீர், ஆழ்த்துளை கிணற்று நீர் மாசுப்படுவது தவிர்க்கப்படுகிறது. பன்றி போன்ற விலங்கினங்களின் தொல்லை குறையும்.


மழைக்காலத்தில் சாக்கடை நீருடன் மழை நீர் கலந்து சாலைகளில் வழிந்து ஓடாது. பாதாள சாக்கடையில் வெளியேற்றப்படும் கழிவுநீரை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தர நிர்ணயப்படி சுத்தம் செய்வதால், அந்நீரை விவசாயத்திற்கு மீண்டும் பயன்படுத்தலாம். விவசாயத்திற்கு சுத்திரிக்கப்பட்ட சாக்கடை நீர் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். அதனால், சுற்றுப்புழ சுகாதார மேம்பாட்டிற்கு நிரந்தர பயன் அளிக்கும் பாதாள சாக்கடை திட்டத்திற்கு பொதுமக்கள் மிகுந்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
நன்றி :அதிரை post

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி