முத்துப்பேட்டை, செப்டம்பர் 24 : முத்துப்பேட்டை யில் SDPI யின் நகர நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் நகர தலைவர் ஜனாப். ரஹமதுல்லாஹ் தலைமை யில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜனாப். தப்ரே ஆலாம் பாதுஷ, மாவட்ட துணைச் செயலாளர், பாவா பஹுருதீன், மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். வருகின்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் அனைத்து வாடுகளில் SDPI சார்பாக போட்டி இட வேட்பாளர்கள் நேர்காணல் மிக சிறப்பாக நடைபெற்றது. முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த கட்சியின் மாவட்ட செயலாளர், வார்டு வேட்பாளர்கள் தங்களுடைய மனுக்களை தாக்கல் செய்துள்ளார்கள். அந்த மனுக்களை தலைமையகத்திற்கு அனுப்பி வைத்து தலைமை எடுக்கும் முடிவை இன்ஷா அல்லாஹ் வருகிற செப்டம்பர் 26 ஆம் தேதி அன்று வேட்பாளர்கள் பட்டியல் வெளி இடப்படும் என்றும், முத்துப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு முஸ்லிம்கள் தரப்பில் 5 பேர் போட்டி இடுவது மிகவும் வேதனைக் கூறியதே, இதனை SDPI வன்மையாகக் கண்டிக்கிறது என்றும், மேலும் தலைவர் பதவிக்கு போட்டி இடும் 5 வேட்பாளர்களை சந்தித்து பேசுவது என இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் முன்னால் நகர தலைவர், ஜனாப் ஆசாத் நகர் எஹ்யா கான், மற்றும் PFI நகரச் செயலாளர் ஜனாப் நிஜம்,முத்துப்பேட்டை நகர செயற்குழு உறுப்பினர் ஜனாப். நிசார் அஹ்மத், தமீம் நியாஸ், SLM . தம்பி மரைகாயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிருபர்
EK .H தமீம் நியாஸ்