"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
01 அக்டோபர் 2011

80 வருட பாரம்பரிய சங்கத்திற்கு எதிராக காவல் நிலையத்தில் அரசியல் கட்சி புகார் !

0 comments

80 வருட பாரம்பரியமிக்கது நமதூரில் உள்ள ஷம்சுல் இஸ்லாம் சங்கம். சின்ன மக்கா என்றழைக்கப்படும் நமதூரில் இஸ்லாமிய முறைப்படி முறையாக பொதுமக்களால் மசூரா செய்து ஆலிம்களின் தலைமையின் கீழ் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டதே தற்போதைய ஷம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகளும், செயலாளர்களும். அவ்வகையில் முன்பைவிட தற்போதைய நிர்வாகிகள் முன் அனுபவமிக்கவர்களாகவும், சமூக அக்கறை கொண்டவர்களாகவும் உள்ளனர். தற்போதைய அநேக தீர்ப்புகளுக்கு ஆலிம்கள் வழிகாட்டுதல் பின்பற்றி நடந்துவருகிறது. அந்த அடிப்படையிலேயே தற்போது நடந்தவரும் உள்ளாட்சி மன்றத் தேர்தலிலும் சங்கத்திற்குட்பட்ட 6 வார்டுகளில் உறுப்பினர்களை முகல்லா வாரியாக விண்ணப்பங்களைப் பெற்று சங்கத்தின் சார்பில் தேர்தலில் நிற்க விண்ணப்பமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம், தங்களது வேட்பாளர்களுக்கு எதிராக போட்டி வேட்பாளர்களை நிறுத்தவேண்டாம் என்றும் மீறும்பட்சத்தில் அக்கட்சிகளின் வேட்பாளர்களுக்கு எதிராக சங்கம் பிரச்சாரம் செய்யும் என்றும் சங்கத்தின் சார்பில் நமதூரில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கு கோரிக்கை கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசியலில் பதவி வகித்தவர்களுக்கு பதவியில்லாவிட்டால் இருப்பு கொள்ளாது என்பார்களே அதேபோன்று தூண்டுதலின் பேரில் சிலர் 80 வருட பாரம்பரியமிக்க ஷம்சுல் இஸ்லாம் சங்கம்சங்கத்திற்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

அந்த புகாரில் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தங்களைப் பிரச்சாரம் செய்ய விடாமல் மிரட்டுவதாகவும், இடையூறு செய்வதாகவும் புகார் அளித்துள்ளனர். கரையர்தெரு, போன்ற தெருக்களில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கு எதிராக தனது வேட்பாளர்களை நிறுத்தாத திமுக வினர் முஸ்லிம்கள் நிறைந்துள்ள, சங்கங்கள் நிறுத்தியுள்ள வேட்பாளர்களுக்கு எதிராக களம் அமைத்திருப்பது இளைஞர்களையும், பொதுமக்களையும் எரிச்சலடைய வைத்துள்ளது.

இந்த புகார் தொடர்பில் எழுத்துப்பூர்வமாக எழுதித் தருமாறு சங்க துணைச்செயலாளர் சகாபுதீன் அவர்களை காவல்துறை அழைத்துள்ளது. சங்கத்தில் பேசிவிட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்த திமுக, நில மோசடி புகாரில் அதன் முந்தைய அமைச்சர்கள் பலர் ஈடுபட்டு சிறைகம்பிகளை எண்ணி வரும் வேளையில், ஆளை விட்டா போதும் என்று உள்ளாட்சித் தேர்தலில் நிற்க பலர் ஓடி ஒளிந்துள்ளதாகவும், அதனால்தான் உள்ளாட்சித் தேர்தல் ஊர் நலனை மட்டுமே கருத்தில் கொண்டே அந்தந்த ஊர்களில் உள்ளவர்களே நிர்ணயித்துக்கொள்ளலாம் என்று தடாலடியாக அறிவித்தார் கருணாநிதி. அதனால் ஏற்கெனவே சம்பாதித்த பணத்தை காப்பாற்றிக்கொள்ள எண்ணி அக்கட்சியினரின் அனுபவசாலிகள் பலரே தயங்கியுள்ளனர். (ஆதாரம்:மலேசிய நண்பன் தினப்பத்திரிக்கை).

சம்சுல் இஸ்லாம் சங்கம் எடுத்த முடிவிற்கு கட்டுப்பட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்து அமீரகம், சவூதி போன்ற நாடுகளில் அதிரை ஐக்கிய ஜமாத் உருவாக்கி, புதிதாக சங்கக் கிளைகளை அமைத்து ஆதரவு பெருகிவரும் வேளையில், ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருப்பதும் வேதனையளிக்கிறது. இந்நிலையில் அதிரை பஞ்சாயத்து சேர்மன் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்ட மக்கள் வாக்களித்தாலும், வார்டு கவுன்சிலர் பதவிக்கு சங்கத்தின் வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர்கள் மக்களின் எதிர்ப்பை ஓட்டு முலமாக தெரிந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.


by

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி