"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
01 அக்டோபர் 2011

மமக எம்.எல்.ஏ-க்கு 1 ஆண்டு சிறை தண்டனை: பரபரப்பு தீர்ப்பு!

0 comments

முறையாக அனுமதி பெறாமல் வெளிநாட்டிலிருந்து பணம் வசூலித்ததாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ ஜவாஹிருல்லாவுக்கு ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சியின் சார்பாக ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ வாக இருக்கும் தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் மீது தொடரப்பட்டிருந்த வழக்கொன்றில் சென்னை நீதிமன்றம் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளது.

இது தொடர்பாக சிபிஐ காவல்துறையினர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

"சிபிஐ காவல்துறையின் லஞ்ச ஒழிப்பு பிரிவு சார்பில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாநில தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஹைதர் அலி மற்றும் எச்.சையது நிசார் அகமது, ஜி.எம்.சேக், நல்ல முகமது களஞ்சியம் ஆகியோர் மீது சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த 15.12.1997 முதல் 20.6.2000 வரை இவர்கள் செய்த குற்றம் தொடர்பாக இந்த வழக்கு தொடரப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து ரூ.1 கோடியே 54 லட்சத்து 88 ஆயிரத்து 508 வசூலித்ததாகவும், இதற்கு முறையாக மத்திய அரசிடமோ, ரிசர்வ் வங்கியிடமோ அனுமதி பெறவில்லை என்றும் மேற்கண்ட 5 பேர் மீதும் வெளிநாட்டு பணம் முதலீட்டு ஒழுங்கு முறை சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டி வழக்கு போடப்பட்டது.

இந்த வழக்கில் சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் நீதிபதி பி.மோகன்தாஸ் தீர்ப்பு வழங்கினார். அந்தத் தீர்ப்பில் ஜவாஹிருல்லாவுக்கும், ஹைதர் அலிக்கும் தலா 1 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், சையது நிசார் அகமது, ஜி.எம்.சேக், நல்ல முகமது களஞ்சியம் ஆகியோருக்குத் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.

மேலும் இவர்கள் அனைவருக்கும் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் (ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி ஆகியோருக்குத் தலா ரூ. 10 ஆயிரம், சையது நிசார் அகமது, ஜி.எம்.சேக், நல்ல முகமது களஞ்சியம் ஆகியோருக்குத் தலா ரூ.40 ஆயிரம்) அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

தண்டனை பெற்றவர்களில் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் மனிதநேய மக்கள் கட்சியின் (ராமநாதபுரம் தொகுதி) எம்.எல்.ஏ. ஆவார்.

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.



THANKS:இந்நேரம்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி