"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
01 அக்டோபர் 2011

குஜராத் காவல்துறை அதிகாரி சஞ்சீவ் கைது

0 comments


அஹமதாபாத்,அக்டோபர் 01: குஜராத் காவல்துறை முன்னால் அதிகாரி சஞ்சீவ் பட் இன்று கைது செய்யப்பட்டர். குஜராத் இனப் படுகொலை வழக்கில் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக பட் மிக முக்கியமான சாட்சிகளை பதிவு செய்திருந்தார்.கலவரத்தின் போது மோடி வீட்டில் நடந்த கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இந்துக்கள் கலவரத்தில் ஈடுபடுவதை தடுக்கவேண்டாம் என அந்த கூட்டத்தில் மோடி காவல்துறை அதிகாரிகளுக்கு கட்டளை இட்டதாக அதில் கூறி இருந்தார்.இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதற்கு சாட்சியாக அப்பொழுது அவருடைய கார் ஓட்டுனராக இருந்த கே.டி.பன்தை திரு.பட் கூறியிருந்தார். ஆனால் பட் தன்னை வற்புறுத்தி சாட்சியாக கையெழுத்து போட வைத்ததாக பன்த் கடந்த ஜூன் மாதம் 24-ஆம் தேதி கொடுத்த புகாரின் பேரில் பட் இன்று கைது செய்யப்பட்டார்.குஜராத் முன்னால் அமைச்சர் ஹரேன் பாண்டியா கொலை வழக்கில் முக்கிய தடயங்களை அழிக்க வற்புறுத்தியதாக 2 நாட்களுக்கு முன்பு குஜராத் உயர் நீதிமன்றத்தில் பட் மற்றொரு மனு தாக்கல் செய்திருந்தார். இதைத் தொடர்ந்தே இந்த கைது நடந்திருப்பதாக மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.இது மோடி அரசின் பழி வாங்கும் செயல் என முன்னால் குஜராத் முதல்வர் சங்கர்ஸின் வகேலா கருத்து தெரிவித்துள்ளார். மனித உரிமைகளுக்காக போராடுபவர்களை வாய் மூட வைப்பதற்கான முயற்சி இது என கலவரத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்காக வழக்கில் வாதாடி வரும் வழக்கறிஞர் முகுல் ஸின்ஹா கருத்து தெரிவித்துள்ளார்.கைது செய்யப்பட்ட சஞ்சீவ் பட் விசாரனைக்காக அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். அவர் எங்கு அழைத்து செல்லப்பட்டார் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி