"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
04 அக்டோபர் 2011

நாடோடி

0 comments


கடல் கடக்கக்
கடவுச்சீட்டுக்
கரம் வந்ததும்;
மனம் குளிர்ந்து
முகம் மலர்ந்தக்;
குடும்ப உறவுகள்!

கரிசனத்தோடு நலம்
விசாரிக்கும் ஊர்வாசிகள்’
விசா வந்ததா என்று!
சிறு மூட்டைகளைக்
கையில் ஒளித்துக்கொண்டு;
உறவுகளுக்கு அங்கே சேர்க்க
எண்ணங்கொண்டு!

பட்டியல் போட்டுக்
காதைக் குடையும்
வாண்டுகள்;
அது வேண்டும்
இது வேண்டும் என்று!

பலகாரங்கள்
பையை நிரப்ப;
துணிமணிகள்
ஒதுங்கிக்கொள்ள;
வியர்த்த கைகளில்
கடவுச்சீட்டும்;
விமானச்சீட்டும்!

கட்டிப்பிடித்துக்
கண்கள் அழ;
கூடவே மூக்கும்
சேர்ந்துக்கொண்டு!

கனமான இதயத்துடன்
காருக்குள் நான்;
முத்தத்தால் எச்சில் பட்ட
நெற்றியுடன்;
ஏறி இறங்கும் மூச்சுடன்;
பணம் விளையும்
பாலைக்குப் பயணம்!

-யாசர் அரஃபாத்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி