மசக்கையில்,
நாற்றமும் குமட்டி;
துர்நாற்றமும் குமட்டி;
பேச்சு சப்தங்கள்
சங்கடமாய்;
முகச் சுளிப்புச்
சாதாரணமாய்;
புரியாத எரிச்சல்
என்னைத் தொற்றிக்கொள்ள;
புரிந்திருக்கும் எனக்கு
காரணம் நீதான் என்று!
முட்டிவிட்டு;
என் வயிற்றை
முட்டிக்கொண்டு – நீ
எட்டி உதைப்பதைத்
தொட்டுப்பார்த்து – என்
ரோமங்கள் எழுந்து
ஆர்பரிக்கும்;
சிலிர்த்தச் செல்கள்
அடங்க மறுக்கும்!
எதை உண்டாலும்;
எதிர்த்துத் தள்ளும்
குடலை வார்த்தையால்
சலித்துவிட்டு;
மீண்டும் உனக்காக
உண்பேன்!
முழுவதாய் உனைப்
பெறும் போது;
முழு மயக்கத்தில்
இருப்பேனோ –இல்லை;
அரை மயக்கத்தில் கிடப்பேனோ;
படாதப் பாடுப்படுத்தும்
உனைச் செல்லமாய் கிள்ளி;
சன்னமாய் சிரிக்கக்
காத்திருக்கும் உன் தாய்!தலைப்புத் தந்தவர்:
RIFASA & YASHAR
South Eastern University of Sri Lanka
Faculty of Applied Science