"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
13 அக்டோபர் 2011

முகத்தில் துப்பினால் மரியாதை!!!

0 comments
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான நம்பிக்கையும் பழக்கங்களும் உள்ளன. யூத மதத்தில் பாவத்தை தொலைப்பதற்கு ஒரு சென்ட்டிமென்ட் உண்டு. உயிருடன் இருக்கும் ஒரு கோழியை தோள் உயரத்திற்கு தூக்கிப்பிடித்து ஜெபிப்பார்கள். பின் மூன்று முறை சுற்றுவார்கள். இப்படி செய்யும்போது பாவங்கள் மனிதர்களிடம் இருந்து கோழிக்கு 'ட்ரான்ஸ்பர்' ஆகிவிடுமாம். பின்னர், கோழியை குழம்பு வைத்து சாப்பிடுவார்கள். குழம்பு கொதிக்கும்போது எல்லா பாவங்களும் ஆவியாகி வெளியேறி விடும் என்பது அவர்கள் நம்பிக்கை.

வெனிசுலாவில் 'எனோமேமோ' என்ற ஒரு பழங்குடி இனம் இருக்கிறது. இவர்களில் யாராவது ஒருவர் இறந்து விட்டால் அவர்களின் மிச்சம் மீதி எதுவும் இந்த உலகில் இருக்கக்கூடாதாம். யாராவது இறந்தால் உடலை நன்றாக எரித்து சாம்பலாக்கி விடுவார்கள். மிஞ்சும் எலும்பை பொடியாக்கி சாம்பலுடன் கலந்து சாப்பிட்டு விடுவார்கள். சாம்பல் வைத்திருந்த பானையையும் உடைத்து விடுவார்களாம்.

'மசாய்' என்ற பழங்குடி மக்கள் கென்யா, தான்ஸானியா நாடுகளில் வசிக்கிறார்கள். இவர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போது கை குலுக்கிக்கொள்ள மாட்டார்கள். மாறாக ஒருவர் முகத்தில் ஒருவர் துப்பிக்கொள்வார்கள்.

''நல்லவேளை முகத்திலே துப்பிட்டான்; இப்பதான் நிம்மதி'' என்று மனதில் நினைத்தபடி முகத்தில் வழியும் எச்சிலை சந்தோஷத்தோடு துடைத்துக்கொள்வார்கள். அப்போதுதான் மரியாதை, நட்பு எல்லாம். சந்திப்பவர்கள் நண்பர்கள் என்றால் துப்புவது வேகமாக இருக்கும். எதிரில் வருபவர் துப்பாமல் சென்று விட்டால் அவர் 'எதிரி ஆகிவிட்டார்' என்று அர்த்தம்.

சிலரிடம் முகத்தில் துப்புவதற்கு பதிலாக கைகுலுக்கிகொள்ளும் நாகாரீக பழக்கமும் உண்டு. இருந்தாலும் கைகுலுக்குவதற்கு முன் கைகளில் துப்பிக்கொள்வார்கள். இவர்களுக்கு குழந்தை பிறந்தால் அத்தனை பெரும் கூட்டமாக நின்று குழந்தை மேல் துப்போ துப்பென்று துப்புவார்கள். இதுபோக குழந்தையை பார்த்து 'நாசமா போ' என்று திட்டித்தீர்ப்பார்கள். நல்லாயிரு என்று சொன்னால் குழந்தை நாசமாய் போகுமாம். 'நாசமா போ' என்றால் நல்லாயிருக்குமாம். வாழ்வாங்கு வாழுமாம்.

நாசமாப்போச்சு, போங்க !

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி