
திருச்சி மேற்குத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி திமுக வேட்பாளர் கே.என்.நேருவைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் இன்று வெளி வந்து கொண்டு இருக்கும் நிலையில் அதிமுக 10 மாநகராட்சிகளிலும் பெருன்பான்மையான நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் முன்னிலையில் உள்ளது.
அதிமுகவின் தேத்தல் வெற்றியைக் கொண்டாத முடியாத நிலை ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்குக் காரணமாக நேற்றும் இன்றும் ஜெயலலிதா பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி வருவதால் தேர்தல் வெற்றியை முழுமையாகக் கொண்டாட முடியாத நிலை ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜரான தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் 300 க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப் பட்ட நிலையில் எல்லா கேள்விகளுக்கும் ஜெயலலிதா சோர்வடையாமல் பதில் அளித்ததாக ஜெயலலிதாவின் வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இன்னும் ஜெயலலிதாவிடம் கேள்விக் கணைகள் மீதம் இருப்பதால் ஜெயலலிதா நாளையும் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராகி பதில் அளிக்க உள்ளார். 5.15 மணிக்கு விசாரணை முடிந்த நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடனே சென்னைக்குக் கிளம்பி விட்டார்.