21 அக்டோபர் 2011
உள்ளாட்சி சூறாவளி துபையில் கரை கடந்தது
அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம் ? என்று சொல்வார்கள் அதேபோலதான், துபைக்கும் தேர்தலுக்கும் உள்ள சம்பந்தம், இது எல்லோருக்கும் தெரியும். ஒருவேளை துபை அரசாங்கமே தேர்தல் நடத்த முன் வந்தாலும் வெளிநாட்டுக்காரன் வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடியும். கடந்த சில தினங்களாக தேரா துபையில் தேர்தல் பிரச்சார அனல் பறந்தது என்றால் நம்புகிறீர்களா ஆனால் அதுதான் உண்மை.
நடந்து முடிந்த தமிழக உள்ளாட்சி தேர்தலையொட்டித் தான் இவ்வளவு கூத்தும். ஒரு பக்கம் துபையில் வசிக்கும் வலைத் தோழர்கள் வரிந்து கட்டிக் கொண்டு பக்கம் பக்கமாய் பரப்புரை எழுதித் தள்ள, இன்னொரு பக்கம் கத்தியின்றி ரத்தமின்றி ஒரு யுத்தமே நடந்து முடிந்தது. அதாங்க, மைக் இல்லை ஆட்டோ இல்லை பேரணி இல்லை போஸ்டர் இல்லை ஆனாலும் தங்களுக்கு வேண்டிய வேட்பாளருக்கு தேவையான பிரச்சாரம் மட்டும் கண ஜோராக நடந்து முடிந்தது.
குறிப்பாக, நம் அதிரை சகோதரர்களின் பிரச்சாரம் கொடி கட்டி பறந்ததென்றே சொல்லலாம். ரூம் ரூமாக ஏறியும், வழிகளில் சந்திக்கும் போதும் மறந்து விடாமல் வீட்ல சொல்லி ஓட்டுப்போட சொல்லச் சொன்ன பாங்கு, எஸ்.எம்.எஸ் பிரச்சாரம், ஈமெயில் வேண்டுகோள்கள் என சூழல, இன்னொரு பக்கம் அதிரை வாக்காளர்களின் வீடுகளுக்கே போன் செய்து குடும்ப ஓட்டுக்களை திரட்டி விதம் அப்பப்பா... தேர்தல் என்னவோ துபையில் நடக்கிறதோ என்ற எண்ண அலைகளை எழுப்பின.
வேட்பாளர்களே! நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வெற்றியோ தோல்வியோ ஆனால் நீங்கள் வாங்கியுள்ள வாக்குகளுக்கு பின் உங்கள் துபை வாழ் சகோதரர்களின் கடும் உழைப்பும் இருக்கின்றது என்பதை மறவாதீர்கள்.
ஊர் ஒற்றுமையில் ஆரம்பித்து பிறகு தெரு ஒற்றுமைக்கு இறங்கி பின் சங்கத்துக்காக பிரச்சாரமும் கடைசியாக சிந்தித்து வாக்களிக்க வேண்டிய சுவராஸ்யங்களும் இன்னும் மனதை விட்டு அகலவில்லை. மொத்தத்தில் உள்ளாட்சி தேர்தல் உள்ளூரை மட்டுமல்ல துபை மாநகரையும் ஒரு மவுனப்புரட்சிக்குள் ஆழ்த்திவிட்டே முடிந்துள்ளது.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் தந்து கொண்டுள்ள அதிரை வலைத்தளங்களுக்கு ஒரு சல்யூட்.
சகோதரன்
அன்வர்தீன்
thanks: aim
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post a Comment
நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி