
சமீப நாட்களில் யுட்யூப்பில் அதிகம் கேட்கப்பட்ட ஆடியோ க்ளிப் இது. இதில் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் நிஜமாகவே அப்பிராணியா… அல்லது ‘லந்தடிக்கிறாரா’ என்ற ஆராய்ச்சியை விட்டுவிட்டு ‘கேட்டுப் பாருங்கள்..’
இன்னொரு பக்கம் ஏர்டெல்லுக்கு மகா புத்திசாலித்தனமான விளம்பரமும் கூட!
ஒருவேளை இதை ஏர்டெல்காரர்களே உருவாக்கி உலவ விட்டிருப்பார்களோ என்ற சந்தேகமும் உள்ளது. இந்த சந்தேகம் உண்மையாகும் பட்சத்தில், தொலைத் தொடர்பு விதிகளை மீறி்ய குற்றத்தில் அந்த நிறுவனம் சிக்க வாய்ப்புள்ளது.
அதே நேரம், தமிழர்களை அறியாமையில் உழல்பவர்களாகக் காட்ட முயல்கிறதா ஏர்டெல்? என்ற கேள்வியும் எழாமலில்லை.