"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
16 அக்டோபர் 2011

தாய்லாந்தில் வெள்ளம் அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை

0 comments

தாய்லாந்தில் தலைநகர் பாங்காக்கை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள இந்தியர்களுக்கு, இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தாய்லாந்தில், வரலாறு காணாத அளவிற்கு இந்தாண்டு பெய்த மழையால் பாங்காக்கைச் சுற்றியுள்ள பகுதிகள், வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.இந்நிலையில், பாங்காக்கின் மத்திய பகுதியும் வெள்ள அபாயத்திற்கு உட்பட்டுள்ளது. உபரி வெள்ளம் வெளியேற வசதியாக கால்வாய்கள், போர்க்கால அடிப்படையில் அகலப்படுத்தப்பட்டு வருகின்றன. வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அங்குள்ள இந்தியத் தூதரகம், பாங்காக்கில் சுற்றுலாவிற்கு வந்த இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,"இந்திய சுற்றுலா பயணிகள், சுற்றுலாவிற்கு செல்லும் முன், அன்றைய நிலவரத்தைத் தெரிந்து கொண்ட பின் செல்வது நல்லது. நகரின் தாழ்வான பகுதிகள் வெள்ள அபாயத்தில் உள்ளன. மத்திய, சுற்றுலா மற்றும் வர்த்தக பகுதிகளுக்கு அபாயம் இல்லை. எனினும் அவை வெள்ளத்தில் மூழ்காது என்பதற்கு உத்தரவாதம் இல்லை' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பயணிகள் தங்கள் சுற்றுலா ஒருங்கிணைப்பாளர், ஓட்டல்கள், வழிகாட்டிகள் ஆகியோர் மூலம், வெள்ள நிலவரத்தைக் கேட்டறிந்து கொள்ள வேண்டும் எனவும், தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி