அப்பிள் தனது ஐ போன் வரிசையில் அடுத்த வெளியீடான ஐ போன் 5 வினை எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியிடவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக அப்பிள் நிறுவனத்தின் உற்பத்திகள் வெளிவருவதற்கு முன்னரே அவற்றைப்பற்றிய எதிர்பார்ப்புகள்,செய்திகள் மற்றும் வதந்திகளுக்கு குறைவிருக்காது.
அதனைப் போலவே இம்முறையும் ஐ போன் 4 s பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளது.
ஐ போன் 4 s ஆனது தனது கடைசி வெளியீடான ஐ-போன் 4 வை விட வேகமானதும் ஐ பேட் 2 கணனியில் உபயோகிக்கப்பட்டதுமான ' 'ஏ 5' புரசஸரைக் கொண்டிருக்குமெனவும் 8 மெகா பிக்ஸல் கெமராவைக் கொண்டிருக்குமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இது அப்பிள் அண்மையில் அறிமுகப்படுத்திய ஐ கிளவுட் வசதியினையும் கொண்டிருப்பதுடன் வடிவத்தில் ஐ போன் 4 இனை ஒத்ததாகவும் அதனை விட பெரிய தெளிவான திரையை கொண்டிருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மற்ற கம்பெனிகளில் உள்ள software support பண்ன௬டிய வாய்ப்பு 4 s யில் அதிகமாக உள்ளது இன்று தெரிவிக்கிறார்கள்.
ஐ போன் 4 s என பெயரிட்ட சில தினங்களில் உரிமையாளர் "ஸ்ட்டிவ் ஜாப்ஸ்" மரணம் அடைந்தார் (குறிப்பிடத்தக்கது)
அப்பிள் தனது ஐ போன் 4 வை கடந்த வருடம் ஜூன் மாதம் வெளியிட்டிருந்தபோது அது மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
ஐ போன் 4 s யில் இதுவரையும் காணாத பல சிறப்பு அம்சங்கள் உள்ளது.
இதேவேளை அப்பிள் மத்திய தர சந்தைகளை கருத்திற் கொண்டு குறைந்த விலையிலான ஐ-போனையும் தயாரித்து வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அப்பிள் மத்திய தர சந்தைகளை கருத்திற் கொண்டு குறைந்த விலையிலான ஐ-போனையும் தயாரித்து வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆக்கம் : சிராஜுதீன் -M.S.T