"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
31 அக்டோபர் 2011

இந்தியாவின் பணக்கார பெண் சாவித்ரி ஜிந்தால் ..!

0 comments

போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள பணக்கார இந்தியர்கள் பட்டியலில் 5வது இடம் பிடித்துள்ள சாவித்ரி ஜிந்தால் தான் இந்தியாவின் பணக்கார பெண்மணி ஆவார். முகேஷ் அம்பானி முதல் இடத்தை தக்கவைத்துள்ளார். பணக்கார இந்தியர்கள் பட்டியலை அமெரிக்காவின் முன்னணி பப்ளிஷிங் மற்றும் மீடியா நிறுவனமான போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.


அதில் தொடர்ந்து 4வது முறையாக முதல் இடத்தில் உள்ளார் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானி. அவரது சொத்து மதிப்பு 22.6 பில்லியன் டாலர். ஆனால் அவரது தம்பி அனில் அம்பானி 10வது இடத்தில் இருந்து 13வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 19.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புள்ள ஸ்டீல் நிறுவன அதிபர் லக்ஷ்மி மிட்டல் இரண்டாவது இடத்தில் உள்ளார். விப்ரோ நிறுவனர் ஆசிம் பிரேம்ஜி 3வது இடத்திலும், 9.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புள்ள சாவித்ரி ஜிந்தால் 5வது இடத்திலும் உள்ளனர். இன்றைய தேதிக்கு இந்தியாவின் பணக்காரப் பெண் சாவித்ரி ஜிந்தால் தான். இந்த பணக்கார பட்டியிலில் 14 புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளன.


இன்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ராகுல் பாட்டியா மற்றும் ஆனந்த் மஹிந்திரா ஆகியோர் பெயர்கள் முதன்முறையாக இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இந்த பட்டியிலில் இருந்த வினோத் கோயன்கா மற்றும் ஷாஹித் பால்வா ஆகியோரின் பெயர்கள் தற்போது இல்லை. அவர்கள் இருவரும் 2ஜி ஊழல் வழக்கில் கைதாகி திகார் சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி