"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
23 அக்டோபர் 2011

தலைமுறையின் புதிய முறை வரவேற்க்க தக்கது ...!

0 comments

பளீர் என்ற ஒளிபரப்பு…
எரிச்சல் படுத்தாத வணக்கம்ம்ம்ம்ம்ம்ம் என்று நம்மளை கொல்லாத, இனிய புத்தும் புதிதான செய்தி வாசிப்பாளர்கள், தொகுப்பாளர்கள்….

எண்ணத் துணிவு, வண்ணத் தெளிவாக, செய்திகளை பாரபட்சமின்றி உடனுக்குடன் தரும் புதிய தலைமுறை டிவிக்கு ஒரு சபாஷ்.

ஹிந்தியில் இருக்கும் சில செய்தி சேனல்கள் பார்த்து பெருமூச்சு மட்டும் விட்டு வந்த தமிழர்களுக்கு நிம்மதியான ஒரு சேனல்.

இதில் விசேஷம் என்னவென்றால் இதை இணையம் மூலமாகவும் அதே நேரத்தில் – அதாவது டிவியில் பார்க்கும் அதே ஒளிபரப்பு நேரத்தில் எந்த காலதாமதமும் இன்றி உலகின் எம்மூலையில் இருப்பினும் பார்க்கலாம்…

இணைய ஒளிபரப்பு முகவரி http://www.puthiyathalaimurai.tv/

உலகத் தமிழர்கள் வரலாற்றில் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் மானிட்டரில் வந்துள்ளது…

இதில் பெரும்பங்காற்றும் வல்லுநராக இருக்கும் திரு.மாலன், அவர்களுக்கு… வாழ்த்துக்கள்…

இதை கொணர்ந்த எஸ்.ஆர்.எம் நிறுவனத்தின் திரு.பச்சைமுத்து, திரு.சத்யநாராயணா ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்

ஒரு கோரிக்கை.: தயவு செய்து பிற சேனல்களில் இருந்து பிரபலமானவர்கள் என்று நினைத்து செய்தி மற்றும் பிற தொகுப்பாளர்களை நிகழ்ச்சியில் காண்பித்து விடாதீர்கள்… ரொம்ப நொந்து போயிருக்கோம்… உங்க டிவி ஆறுதலாய் மலர்ச்சியாய் இருக்கிறது … தொடரட்டும் அப்படியே…

அது சரி , குறைகளே இல்லையா என்றால் சில இருக்கின்றன……
- ஒரு செய்தி கலந்துரையாடலில் – அதிமுகவின் சி.கே.சரஸ்வதியும், திமுகவின் ஒரு வக்கீலும் பங்கேற்ற நிகழ்ச்சி… – நிகழ்ச்சி நடத்துபவர், கலைஞர் என்று சொல்லி விட்டு பின், ”… பாருங்க கட்சிகாரருடன் பேசி விட்டு நானும் கலைஞர் என்று சொல்லி விட்டேன்…. அது சரி பெரியவர் தானே…. “ என்று ஏதோ செய்யக்கூடாத தவறைச் செய்து விட்டது போல் , “கருணாநிதி…. “ என்று தொடர்ந்தார்.

ஏன் அதே செய்தியாளர்கள், இந்த டிவியை நடத்துபவரைக் குறிப்பிடும் போது திரு.பச்சைமுத்து என்று தானே சொல்வார்கள்…?

மேலும், கள செய்தி சேகரிப்பவர் வேட்பாளரிடம் பேசும் போது வெறும் பெயர் சொல்லி பேசினார்கள்…

இது எந்த வகையில் சேர்த்தி. ஒவ்வொரு தேசத்திற்கும் ஒரு கலாச்சார முறை இருக்கிறது. அமெரிக்காவில் ‘’’ ஹலோ ஒபாமா…” என்று சொல்வார்களாயிருக்கும்…
அதற்காக நம்து பண்பான திரு, திருமதி, அய்யா , அம்மா , செல்வி என்று முகமனுடன் சொன்னால் என்ன…?

23 வயது தாண்டது பொடிசுகளெல்லாம், வயதில் முதிர்ந்தவர்களை பெயர் சொல்லி கூப்பிடுவது நெருடுகிறது.
அவர்களின் அப்பா அம்மாவை இது மாதிரி வெறும் பெயர் சொல்லி அடுத்த சிறுவன் கூப்பிடுவது போல் நினைத்துப் பார்த்தல் நன்று…

திரு.மாலன் காட்டும் திசை இது தானா…?
நாகரீகத்திற்கு ஒரு அடையாளாம் போல் நான் பார்த்த திரு.மாலன் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

திரு.மாலனை கடுமையாக விமர்சனம் செய்தவர்களே அங்கு மேலான்மை குழுவில் இருப்பதால் அவரால் இது முடியவில்லையா என்றும் தெரியவில்லை….

அதே மாதிரி, செய்தி சேகரிப்பில் மறைமுகமாக திமுக/ அதிமுக விற்கான எதிர் பிரச்சாரமும் இருக்கிறது.
நீண்ட நோக்கில் அது சறுக்கலாக கூட அமையலாம்.
ஐ.ஜே.கே கட்சியின் அதிகார மையத்தால் நடத்தப்படும் தொலைக்காட்சியாக இருப்பினும் இதைத் தவிர்ப்பது நன்று…

தலைமுறைக்கு நமது புதியமுறை (அதிரைஃபேக்ட்) மேலும் மேலும் வளர வாழ்த்துகிறது.


Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி