"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
20 அக்டோபர் 2011

உங்கள் பிள்ளைகள் அதிக மதிப்பெண் பெற வேண்டுமா ..?

0 comments

* பாடப் புத்தகங்களிலிருந்துதான் வினாக்கள் கேட்கப்படும். எனவே, வழிகாட்டி நூல்களை (guide) மட்டுமே முழுமையாக நம்பி இருக்க வேண்டாம். பாட நூல்களை முழுமையாகப் படிக்க வேண்டும்.

* டியூசன் படித்தாலும்கூட, வீட்டுக்கு வந்து பாடங்களைப் படிக்க குறிப்பிட்ட அளவு நேரத்தை ஒதுக்க வேண்டும்.

* எந்தப் பாடங்களை எப்போது படிப்பது என்பது குறித்து கால அட்டவணை தயார் செய்து கொண்டு படிக்க வேண்டும். அப்போதுதான் பாடங்கள் மனதில் நிற்கும்.

* படித்த விஷயங்களைத் திரும்பத் திரும்ப மனதில் கொண்டு வந்து பழக வேண்டும்.

* சூத்திரங்கள், சமன்பாடுகள், கோட்பாடுகள் போன்றவற்றைக் குறிப்புகளாக எடுத்து வைத்துக் கொண்டால் அவற்றைத் திரும்பப் பார்க்கும் போது படித்தது நினைவுக்கு வரும்.

* பாடங்களைச் சிலர் மனப்பாடமாகச் சொல்லிவிடுவார்கள். ஆனால், எழுதும் போது தடுமாற்றம் ஏற்படலாம். எனவே, படித்த வினாக்களுக்கான விடைகளை எழுதிப் பார்ப்பது நல்லது.

* மனப்பாடப் பகுதிகளை வீட்டிலேயே ஒன்றுக்குப் பலமுறை எழுதிப் பார்த்து பிழையின்றி எழுத முடிகிறதா என்று பார்க்க வேண்டும்.

* தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பதைவிட, இடைவெளி விட்டுப் படிக்கும்போது, படிக்கின்ற பாடங்கள் மனதில் நன்கு பதியும்.

* தேர்வுக்கு முன்தினம் நீண்ட நேரம் கண்விழித்துப் படிக்காதீர்கள். மறுநாள் தேர்வு எழுதும்போது சோர்வு ஏற்படலாம்.

* அடுத்த நாள் தேர்வுக்கு வேண்டிய பேனா, பென்சில், ரப்பர், ஜியோமிதி பெட்டி, ஸ்கேல் போன்ற அனைத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளவும். கூடுதலாக ஒரு பேனா வைத்திருப்பது நல்லது.

* தேர்வு நடைபெறும் நாளில் தேர்வு நடைபெறும் இடத்துக்கு, உரிய நேரத்துக்கு முன்னதாகவே சென்றுவிட வேண்டும். வீண் காலதாமதம் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும்.

* தேர்வு அறையில் நுழைந்தவுடன் உங்கள் எண்களைக் கண்டுபிடித்து உங்கள் இருக்கையில் அமரவும்.

* மூச்சுப் பயிற்சியைச் சிறிது நேரம் செய்வதன் மூலம், உடலும் மனமும் அமைதி பெறும்.

* பரபரப்படையாமல் முதலில் வினாத்தாளை முழுவதுமாகப் படிக்க வேண்டும்.

* விடைத்தாளில் வினா எண்ணைத் தெளிவாகக் குறிப்பிடவும்.

* வினாத்தாளைப் பார்த்ததும் தெரியாத வினாக்கள் இருந்தால் திகைத்து விட வேண்டாம்.

* உங்களுக்குத் தெரிந்த வினாக்களுக்கு முதலில் அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதத் தொடங்குங்கள்.

* ஒவ்வொரு வினாவையும் படித்து, என்ன கேட்கப்பட்டிருக்கிறதோ அதற்கு மட்டும் முழுமையாக விடையளிக்க வேண்டும்.

* எளிய வார்த்தைகளைக் கொண்டு சிறிய வாக்கியங்களில் உங்கள் பதில்களை எழுத வேண்டும்.

* உங்கள் கையெழுத்து தெளிவாக இருக்க வேண்டும்.

* முக்கியத் தலைப்புகளையும் துணைத் தலைப்புகளையும் தெளிவாக எழுதி கோடிட்டு வேறுபடுத்திக் காட்ட வேண்டும்.

* ஒவ்வொரு வினாவையும் எவ்வளவு நேரத்தில் எழுதி முடிக்க வேண்டும் என்பதை உணர்ந்து அதற்கேற்ப விரைவாகப் பதில்களை எழுத வேண்டும்.

* ஒரு சில வினாக்களுக்கு விடை எழுத அதிக நேரம் எடுத்துக் கொண்டால் அதற்கு அடுத்து எழுதும் விடைகளில் அந்த நேரத்தைச் சரிசெய்து கொள்ள வேண்டும்.

* ஒரு வினாவுக்கான விடை நினைவுக்கு வராமல் போனால் அதையே நினைத்துக் கொண்டு அதனுடனே போராடிக் கொண்டு இருக்கக் கூடாது.

* அந்த நேரத்தில் அதை விட்டு விட்டு மற்ற விடைகளை எழுத வேண்டும். இவை பின்பு தானாக நினைவுக்கு வரும். அப்பொழுது எழுதிக் கொள்ளலாம்.

* தேர்வு முடிவதற்கு 15 நிமிடங்களுக்கு முன் நீங்கள் அனைத்தையும் எழுதி முடித்திருக்க வேண்டும்.

* ஒவ்வொரு விடையையும் விரைவாகப் படித்து அதில் தவறு இருந்தால் சரிசெய்ய வேண்டும்.

* தேர்வின் இறுதி நிமிடங்களில் அதிகமாக எழுத வேண்டியிருந்தால் சுருக்கமாக தேவையானவற்றை மட்டும் ஒருசில வரிகளில் எழுதி முடித்து விட வேண்டும்.

* கடும் உழைப்பும் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியுமே வெற்றிப் பாதைக்கு வழிகாட்டி.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி