உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நாளை (21-10-2011) வெள்ளிக்கிழமை காலையில் வெளியாக உள்ளன.
இதனிடையே அதிரை நிகழ்வுகளை அறிந்துகொள்ள உலகெங்கும் உள்ளவர்களின் ஆர்வத்திற்கு தீணியாக தேர்தலுக்குப் பிந்தைய அதிரையின் நிலை எப்படி உள்ளது என்று அறிந்து கொள்ள அதிரையிலுள்ள பேரா.அப்துல் காதர் அவர்களுடன் ஃபோனில் தொடர்புகொண்டு கீழ்கண்ட கேள்விகளை முன்வைத்தோம்.
1) அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் அறிமுக விழாவில் தாயகத்திலிருந்து வந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டீர்கள் என்ற அடிப்படையில், இந்த கூட்டமைப்பை அதிரையில் வலுப்படுத்த என்ன முயற்சிகள் எடுத்தீர்கள்?
2) மாணவர்களுடன் நெடுங்காலம் தொடர்பிலிருந்ததால் அவர்களது அரசியல் மற்றும் இன்னபிற விசயங்களில் அவர்களுக்குள்ள ஈடுபாடு குறித்து உங்கள் கருத்து என்ன?
3) முன்னணி செய்தி ஊடகங்களுக்கு நிகராக, இணைய வலைப்பூ மூலம் நமது ஊர் செய்திகளை வழங்கும் தளங்கள் குறித்தும், அவற்றை ஊர்நன்மைக்காக சீரிய தலைமையின்கீழ் ஒருங்கிணைக்கும் வாய்ப்புகள் குறித்தும் உங்களது ஆலோசனை என்ன?
4) வளைகுடா மற்றும் பலவெளிநாடுகளிலுள்ள அதிரைவாசிகள் குறித்த உங்கள் மதிப்பீடு என்ன?
மேலும் தற்போதைய அதிரை உள்ளூராட்சி அரசியல் நிலவரங்கள் குறித்தும் எமது சவூதி செய்தியாளருடன் நடந்த உரையாடலை அதிரை எக்ஸ்ப்ரஸ்,அதிரைஃபேக்ட் வாசகர்களுக்காக வழங்குகிறோம்.
thanks :adiraixpress